ஜிம்பாப்வே ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் அறிவிப்பு!

0
4337
BCCI

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்து அடுத்து ஆகஸ்டு 27-ஆம் தேதி அமீரகத்தில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கிறது. இதற்கு நடுவில் இந்திய அணி ஆகஸ்ட் 18 20 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வே சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

ஜிம்பாப்வே சென்று ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் இளம் இந்திய அணிக்கு முதலில் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெற்று பின்பு கோவிட் தொற்றால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து வெளியேறி இருந்தார் கே எல் ராகுல். இவரை ஜிம்பாப்வே தொடரிலும் தேர்ந்தெடுப்பு செய்யவில்லை.

- Advertisement -

ஆனால் நடுவில் திடீரென இவரை ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் சேர்த்ததோடு, இவரை கேப்டனாகவும், ஷிகர் தவானை துணை கேப்டன் ஆகவும் மாற்றி அறிவித்தது இந்திய அணி நிர்வாகம். ஜிம்பாவே தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இளம் இந்திய அணியில், ஆசிய கோப்பை காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் உள்ள வீரர்கள் கேஎல் ராகுலும் தீபக் ஹூடாவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் நேரடியாக துபாயிலிருந்து போட்டி நடக்கும் ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரே நகருக்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆசிய கோப்பை இருபத்தி ஏழாம் தேதி தொடங்க உள்ளதால், ஜிம்பாவே செல்லவிருக்கும் இளம் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செல்லமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக புதிய பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்ஷா அறிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக கூறியுள்ள அவர் ” விவிஎஸ் லக்ஷ்மன் ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் பொறுப்பாளராக இருப்பார். ராகுல் டிராவிட் தொடர்ந்து ஓய்வில்லாமல் பணியில் இருந்து வருகிறார். மேலும் இந்திய அணி 23ஆம் தேதி எமிரேட்ஸ் செல்லவுள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிவதற்கும் இதற்கும் இடையில் ஒரே நாள்தான் இருப்பதால், ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக லக்ஷ்மன் இந்திய அணியின் செயல் பொறுப்பாளராக செல்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடைமுறைப்படி நடைமுறைப்படி, பிரதான இந்திய அணி ஒரு தொடரில் இருக்கும் பொழுது, மற்ற இந்திய அணிகளுக்கான பொறுப்பு தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவருக்குத்தான் உண்டு. இந்தவகையில் ஜிம்பாப்வே செல்லும் அணிக்கு லக்ஷ்மன் பொறுப்பேற்கிறார்.

மேலும் ஐபிஎல் முடிந்து ஒரு இந்திய அணி இங்கிலாந்து செல்ல, ஹர்திக் பாண்டியா தலைமையிலான இன்னொரு இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட அயர்லாந்துக்கு சென்றது. இந்த அனுப்பி லட்சுமன்தான் செயல் பொறுப்பாளராக ஒரு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!