ஒரு நாள் போட்டி தொடர்களில் ஒரு முறை கூட சிக்ஸ் அடிக்காத 5 வீரர்கள்

0
2781

கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் ரசிகர்கள் அதிகமாக விரும்பி பார்ப்பது கிரிக்கெட் வீரர்கள் அடிக்கும் சிக்ஸர் தான். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட்டம் முழுக்க அவ்வப்போது பேட்ஸ்மேன்கள் அடிப்பது வழக்கமாகும். ஆனால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் அலட்சியமாக சிக்ஸ் அடித்து தங்களது திறமையை காட்டுகின்றனர்.

கிறிஸ் கெயில், கீரன் பொள்ளர்டு, ஏபி டிவில்லியர்ஸ், ரோஹித் ஷர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்கள் அதிக அளவில் மிக அலட்சியமாக ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி எந்த வகையான போட்டிகளிலும் சிக்ஸர் அடிப்பார்கள். ஆனால் வேடிக்கையான விஷயமாக ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தற்போது வரை ஒரு சிக்ஸ் கூட அடிக்க முடியாத கிரிக்கெட் வீரர்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -

1. திலன் சமரவீரா

வலதுகை பேட்ஸ்மேன் வீரரான சமரவீரா இலங்கை அணிக்காக விளையாடும் அவர் ஆவார். இவர் தனது முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 1998ஆம் ஆண்டு விளையாடினார். இவர் ஒரு ஓபனிங் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் இணைந்து களம் இறங்கும் ஜெயசூரியா போல இவர் அதிரடியாக விளையாடும் வீரர் கிடையாது. ஆனாலும் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பொருத்தவரையில் இவர் ஒரு முக்கிய வீரராகவே பார்க்கப்பட்டார். என்னதான் அனைத்து போட்டிகளும் இவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும், இவர் விளையாடிய 53 ஒருநாள் போட்டிகளில் இவரால் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியாமல் போனது. 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் மொத்தமாக 862 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு போட்டிகளில் சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. மனோஜ் பிரபாகர்

Manoj Prabhakar

இந்திய அணியைச் சேர்ந்த முன்னாள் ஆல்ரவுண்டர் வீரரான மனோஜ் பிரபாகர் 130 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 130 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் 98 போட்டிகளில் பேட்டிங் விளையாடிய இவர் மொத்தமாக 1858 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இதில் இவர் மொத்தமாக 11 அரை சதங்களும் 2 சதங்களும் குவித்துள்ளார். இருப்பினும் 98 போட்டிகளில் விளையாடியும் ஒரு போட்டியில் கூட இவர் சிக்சர் அடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஜாஃப்ரி பாய்காட்

இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இவர். 1964 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக பல போட்டிகளில் முக்கிய வீரராக களம் இறங்கி விளையாடி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிக அளவில் பவுண்டரிகளும் அதேசமயம் சிங்கிள் எடுப்பதிலும் வல்லவர் ஆவார். மொத்தமாக 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 1082 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒன்பது அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும். இவராலும் ஒரு போட்டியில் ஒரு சிக்ஸ் கூட அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4. காலும் பெர்குசன்

ferguson

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். ஆரம்பத்தில் இவர் விளையாடுவதை பார்த்து ஆஸ்திரேலிய அணியின் வருங்கால ஒரு சிறந்த வீரராக வலம் வருவார் என்று அனைவரும் அப்பொழுது கணித்துக் கூறினார்.

இவர் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை மொத்தமாக 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 30 போட்டிகளில் மொத்தமாக 663 ரன்கள் குவித்துள்ளார். இவரது பேட்டிங் அவரேஜ் 41 ஆகும். இவர் மொத்தமாக ஐந்து அரை சதங்கள் குவித்துள்ளார். இருப்பினும் இவரால் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை. கடைசியாக 2011ம் ஆண்டு இவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. டியோன் இப்ராஹிம்

டியோன் இப்ராஹிம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இவர். 2001 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணைக்காக இவர் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடினார். இவர் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1225 ரன்களும் அதேபோல 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,443 இடங்களும் குறித்துள்ளார். 14 அரை சதங்கள் மற்றும் ஒரு சதமும் அடித்து இவரால் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.