‘எப்பா இவரு அவருள்ள’ ஆஷிஷ் நெக்ரா இங்கிலாந்தின் பிரதமர் ஆனாரா? – வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

0
301

இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் ஆஷிஷ் நெக்ரா போல இருப்பதால், சமூக வலைதளங்களில் நெக்ராவை கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

யுனைடெட் கிங்டம் எனப்படும் ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த திங்கட்கிழமை அன்று தேர்வு செய்யப்பட்டார். அந்நாட்டிற்கு பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையும் இவரை சேரும்.

- Advertisement -

இவருக்கு இந்தியாவின் பிரதமர் முதல் ஆளாக வாழ்த்துக்களை தெரிவித்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை மேலும் நீடிக்க பாடுபடுவோம் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இவருக்கு இருக்கும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்திய தொழில்நுட்ப துறையின் தந்தை என்று அழைக்கப்படும் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.

ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பிறகு நாராயணமூர்த்தி கூறியதாவது: “வாழ்த்துக்கள் ரிஷி. அவரை நினைத்து நாங்கள் பெருமிதமாக இருக்கிறோம். நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு அதை சிறப்பாக செய்து கொடுப்பார் என நம்பிக்கையாக இருக்கிறோம். அவர் செயல்படும் அனைத்திற்கும் எங்களது வாழ்த்துக்கள்.” என்றார்.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, கிரிக்கெட் ரசிகர்களுக்கு இவர் எப்படி மீம் கன்டென்ட் ஆனார் என நாம் இங்கே தெரிந்து கொள்ள வேண்டும். ரிஷி சுனக் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆசிஸ் நெக்ரா போன்று இருக்கிறார். இவரது புகைப்படத்தையும் நெக்ராவின் படத்தையும் ஒன்றாக வைத்துப் பார்க்கையில் நெட்டிசன்கள் புடித்துவிட்டனர். இருவரின் புகைப்படத்தையும் ஒன்றாக வைத்து சமூக வலைதளங்களில், “நெக்ரா, நீங்கள் எப்போது இங்கிலாந்துக்கு பிரதமர் ஆனீர்கள்? வாழ்த்துக்கள்.” என கிண்டலடிக்க துவங்கினர். அந்த தருணம் முதல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கலகலப்பு நிலவி வருகிறது.

- Advertisement -