நெதர்லாந்து வெற்றி.. சூடு பிடிக்கும் உலகக்கோப்பை குவாலிஃபயர்.. இரண்டாவதாக தகுதி பெறப்போவது யார்?

0
3102

2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பையில் நடைபெற இருக்கின்ற 48 போட்டிகளுக்கான அட்டவணையை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது .

பத்து அணிகள் பங்குபெறும் இந்த உலகக் கோப்பை போட்டியில் கிரிக்கெட் லீக் புள்ளிகளின் அடிப்படையில் எட்ட அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்வதற்கு ஐசிசி வேர்ல்ட் கப் குவாலிபயர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

பத்து அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடர் ஜிம்பாப்வே நாட்டில் வைத்து நடைபெற்று வருகிறது . முதல் சுற்று முடிந்து நான்கு அணிகள் வெளியேறிய நிலையில் தற்போது சூப்பர் சிக்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் சிக்ஸ் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஓமன் அணிகள் ஏற்கனவே வெளியேறிய நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஓமன் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின .

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 48 ஓவர்களில் 362 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது. மலையின் காரணமாக போட்டிய 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்த அணியின் துவக்க வீரரான விக்ரம்ஜித் சிங் சிறப்பாக விளையாடி 109 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும் . அவருடன் ஆடிய மற்றொரு வீரரான பரேசி அதிரடியாக ஆடி 65 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார் இதில் மூன்று சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்தப் போட்டியில் மீண்டும் மழை குறிக்கின்றதால் ஓமன் அணிக்கு 44 ஓவர்களில் 320 ரன்கள் வெற்று இலக்காக டக்வொர்த் லிவிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடிய ஓமன் அணி 44 ஓவர்களில் 246 ரன்களை மட்டுமே எடுத்து 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணியின் வீரர் அயான் கான் 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 105 ரன்கள் எடுத்தார.

- Advertisement -

இந்தப் போட்டி தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஓமன் அணிகள் ஏற்கனவே தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்த நிலையில் இலங்கை அணி உலக கோப்பைக்கு தகுதி பெற்றுவிட்டது . ஜிம்பாப்வே ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது . இன்று ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெறும் பட்சத்தில் 8 புள்ளிகளுடன் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.

ஸ்காட்லாந்து அணி இன்று ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணியையும் வீழ்த்தும் பட்சத்தில் அந்த அணி உலகக் கோப்பைக்கு முன்னேறும் . ஜிம்பாவே மற்றும் நெதர்லாந்து அணியை விட ஸ்காட்லாந்து அணி ரன் ரேட் அதிகமாக இருக்கிறது. இன்று ஸ்காட்லாந்த அணி வெற்றி பெற்று நெதர்லாந்து அணியுடன் போட்டியில் நெதர்லாந்து அணி அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் ஜெயிக்கும் பட்சத்தில் அந்த அணி உலக கோப்பைக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.