எல்லாரும் டெக்னாலஜி யூஸ் பண்ணினா.. நீங்க மட்டும் எப்படி பேப்பர்ல எழுதி வச்சி கப் ஜெயிச்சிங்க – இந்த கேள்விக்கு நெஹ்ரா கொடுத்த பதில்!

0
466

ஐபிஎல் போட்டிகளின்போது எதற்காக பேப்பரை கையில் வைத்துக் கொண்டே சுற்றினேன் என்று பதில் கூறியிருக்கிறார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா.

2022ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இரண்டு அணிகளும் இணைக்கப்பட்டன. குஜராத் அணிக்கு மிகச்சிறந்த தொடராக இது அமைந்தது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மிகச் சிறப்பாக விளையாடினார். அதற்கு முன்னர் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இவருக்கு, 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த அணிக்கு பயிற்சியாளராக ஆசிஸ் நெக்ரா நியமிக்கப்பட்டிருந்தார். இருவருக்கும் இடையே மிகச்சிறந்த புரிதல் இருந்தது.

மேலும், வீரர்களும் ஒவ்வொரு போட்டியில் புதிதாக ஒருவர் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்ததால் பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை வென்றது. அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா மற்றும் நெக்ரா இருவரும் இணைந்து குஜராத் அணியை எப்படி எடுத்து செல்வார்கள் என பலரும் ஆச்சரியமாக பார்த்தபோது, முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. மேலும் கோப்பையையும் கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் இந்திய பயிற்சியாளர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.

சீசன் முழுவதும் நெக்ராவிடம் பலரும் ஆச்சரியமாக பார்த்த ஒன்று, போட்டிகளின் நடுவே அவ்வப்போது தனது கையில் பேப்பரை வைத்துக்கொண்டு இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தார். அதில் வீரர்களிடம் கூறுவதற்கு ஏதேனும் திட்டம் வைத்துள்ளாரா? ஆட்டத்தின் போக்கை பொறுத்து என்ன செய்யவேண்டும் என எழுதி வைத்திருக்கிறாரா? என பல்வேறு கணிப்புகள் கூறப்பட்டன. கடைசிவரை அது மர்மமாகவே முடிந்துவிட்டது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் வைத்திருந்த பேப்பரில் அப்படி என்னதான் இருந்தது என்பது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார் ஆஷிஷ் நெக்ரா. “அனைவரும் ஆச்சரியம் வியப்படையும் அளவிற்கு அந்த பேப்பரில் ஒன்றும் இல்லை. அதில் ஏதேனும் ஒன்று இருக்கிறது என்று பலரும் இப்படி ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என புரியவில்லை. யாருக்கு எப்பொழுது பயிற்சியை கொடுக்க வேண்டும் என்ற பட்டியல் தான் அந்த பேப்பரில் இருந்தது. நான் சில நேரங்களில் மறந்து மைதானத்திலேயே வைத்துவிட்டு சென்றுவிடுகிறேன். அடுத்த நாள் புதிதாக மீண்டும் அதை எழுத வேண்டியது இருந்தது. ஆகையால் ஞாபகம் வரும்பொழுது அதை என் கையிலே வைத்துக் கொள்வேன். அதன் காரணமாக அதை கையில் வைத்துக் கொண்டு எங்கும் அங்குமாக நடந்தேன். குஜராத் அணி கோப்பையை வென்றதால், அதற்கான ரகசியம் அதில் இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டார்கள் போல.” எனக் கூறி சிரித்தார்.