” சுமார் 2 பில்லியன் ரூபாய் ” பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா தொடரில் கிடைத்த லாபம் குறித்து ரமீஸ் ராஜா வெளிப்படைப் பேச்சு

0
73
Ramiz Raja about Aus Pak Series profit

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்கிற கணக்கிலும், இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரேயொரு ஒரு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சென்று மூன்று வகை கிரிக்கெட் பார்மெட்டில் விளையாடியதால், ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வமாக இவ்விரு அணிகள் விளையாடிய அனைத்து போட்டிக்கும் மைதானத்திற்கு சென்று கண்டுகளித்தனர்.

இரண்டு பில்லியன் லாபம் நிச்சயம்

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ரமீஸ் ராஜா தற்போது நடந்து முடிந்த தொடர் குறித்து ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்து முடிந்த தொடர் மிகப்பெரிய வருவாயை எங்களுக்கு ஈட்டி தந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

மைதானத்திற்கு வந்து நிறைய ரசிகர்கள் இவ்விரு அணிகள் விளையாடிய போட்டியை கண்டுகளித்தனர். அதேபோல தொலைக்காட்சியில் நேரலையில் நிறைய ரசிகர்கள் இவ்விரு அணிகள் விளையாடிய அனைத்து போட்டியையும் கண்டுகளித்துள்ளனர். பாகிஸ்தான் நாணய மதிப்பில் சுமார் 2 பில்லியன் ரூபாய் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் மூலம் கிடைத்த வருவாயை பாகிஸ்தானிலுள்ள கிரிக்கெட் மைதானங்களில் கட்டமைப்பிற்கு பயன்படுத்த உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்ச்சிப்பாதையில், அதாவது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவதே தங்களுடைய முழு நோக்கம் என்றும் கூறியுள்ளார்.