தோனி விராட் கேப்டன்ஷில சுயநலமாதான் விளையாடினாங்க.. ரோகித் வந்துதான் மாற்றினார் – நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம்

0
48
Sidhu

இந்திய அணி 13 ஆண்டுகளாக ஐசிசி உலகக்கோப்பை வெல்லாத வறட்சியை ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலக கோப்பையை வென்று முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் இதற்கு முன்பாக சுயநலமாக தங்களின் இடங்களுக்கு விளையாடினார்கள் என தைரியமாக நவ்ஜோத் சிங் சிந்து விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி 2011 ஆம் ஆண்டு கடைசியாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரையும், 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று இருந்தது. இதற்கு அடுத்து இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடர்களையும் வெல்லவில்லை. அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. மேலும் கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

முக்கிய போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழப்பது இந்திய அணியின் பழக்கமாக மாறுவது, இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய கவலையாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்தது. உலகக் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக இந்திய கிரிக்கெட் வாரியம் உருவெடுத்த போதும், ஐசிசி கோப்பையை வெல்லாதது அவமானமாகவே கருதப்பட்டது. தற்பொழுது இதற்கு ரோகித் சர்மா தலைமையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சிந்து கூறும் பொழுது “இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா பலவீனத்தை பலமாக மாற்றியிருக்கிறார். இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பையில் பவர் பிளேவில் விளையாடியதை பாருங்கள். இதற்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் தங்களுடைய இடங்களுக்காக சுயநலமாக விளையாடி வந்தார்கள். அவர்கள் தங்கள் இடத்தை அணியில் தக்க வைப்பதற்கு நினைத்தார்கள்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா அணி ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மாபெரும் கூட்டத்தை சத்தம் இல்லாமல் ஆக்கி உலகக் கோப்பையை வென்றது. அதற்கு அப்படியே திருப்பி ரோஹித் சர்மா தலைமையில் சுயநலமில்லாமல் விளையாடிய இந்தியா அணி இந்த டி20 உலகக் கோப்பையில் செய்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க :

இங்கு காலம் எல்லாவற்றையும் அடித்துச் சென்று விடக் கூடியதாக இருக்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சுயநலம் இல்லாமல் உத்வேகம் தந்து விளையாடிய விதத்திற்காக, அவர் காலம் முழுவதிலும் மக்களால் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடியவராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.