ஸ்டார்க்கை மட்டும் இல்ல.. என்னையும் ஜெய்ஸ்வால் இந்த மாதிரி ஸ்லெட்ஜிங் பண்ணார்.. இது உண்மை – நாதன் லயன் பேட்டி

0
231
Lyon

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் போது இந்திய அணியின் தொடக்க இளம் ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தன்னிடமும் நகைச்சுவையாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதாக ஆஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சு லெஜன்ட் நாதன் லயன் கூறியிருக்கிறார்.

இதே முதல் டெஸ்டின் போது ஜெய்ஸ்வால் மிட்சல் ஸ்டார்க் இடம் உங்கள் பந்து மெதுவாக வருகிறது என பேசியது தற்போது வரை சமூக வலைதளத்தில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெய்ஸ்வால் தன்னிடமும் இதே போல் பேசி இருப்பதாக நாதன் லயன் கூறியிருப்பது சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது.

- Advertisement -

மிட்சல் ஸ்டார்க் தந்த பாராட்டு

ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஜெய்ஸ்வால் தன்னிடம் பந்து மெதுவாக வருகிறது என்று கூறியது தனக்கு கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் முன்பு போல தான் பேட்ஸ்மேன்களிடம் எதுவும் பேசுவதில்லை என்றும் கூறியிருந்தார். ஜெய்ஸ்வால் தன்னை பார்த்து சிரித்ததாகவும் தான் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகவும் விளக்கமாக பேசியிருந்தார்.

மேலும் ஜெய்ஸ்வால் பற்றி கூறும் பொழுது இளம் வீரராக இருந்தாலும் அவர் அச்சமற்ற முறையில் விளையாட கூடியவராக இருக்கிறார் என்றும், அவர் சிறந்த திறமை கொண்ட வீரர் எனவும், எதிர்காலத்தில் கிரிக்கெட் வீரராக நிறைய வெற்றிகளை பெறுவார் எனவும் மிட்சல் ஸ்டார்க் பாராட்டியும் இருந்தார்.

- Advertisement -

என்னிடமும் ஜெய்ஸ்வால் பேசினார்

இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது என்னிடமும் பேசினார். அப்போது அவர் 120 ரன்கள் எடுத்திருந்தார் அவருக்கு கொஞ்சம் தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் அவர் என்னிடம் நீங்கள் லெஜெண்ட்தான் ஆனால் உங்களுக்கு வயதாகி விட்டது என்று கூறினார். நான் இது வேடிக்கையானது என சிரித்தபடி கூறினேன். எங்களுக்குள் நடந்த நகைச்சுவையானது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : 2172 நாட்கள்.. ரோகித் சர்மா முக்கிய முடிவு.. ஓபனர் யார்?.. வெளிப்படையான அறிவிப்பு.. 2வது டெஸ்ட்

ஜெய்ஸ்வாலுக்கு முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமாக இது அமைந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸ் ஏமாற்றம் தந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தார். இதேபோல் தற்போது தன் வாழ்க்கையில் முதல் பிங்க் பால் பகல் இரவு டெஸ்ட் போட்டி விளையாடஇருக்கிறார். இதிலும் அவர் சாதிப்பார் எனஇந்திய ரசிகர்கள் நம்புகிறார்கள்.

- Advertisement -