முதல் ஒருநாள் போட்டியில் மேலும் ஒரு சாதனை-எம் எஸ் தோனியின் சாதனையை சமன் செய்த பிரேஸ்வெல்!

0
516

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான  முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் விளையாடிய  இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில்  349 ரன்களை எடுத்தது. இந்தியா அணியின்  சப்மண் கில்  அபாரமாக ஆடி  இரட்டை சதம் அடித்தார்.  இவர் 208 ரன்களில் ஆட்டம் இழந்தார் . இதனைத் தொடர்ந்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்த அணி ஒரு கட்டத்தில் 130 நாட்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து  தவித்துக் கொண்டிருந்தது.

- Advertisement -

அப்போது ஜோடி சேர்ந்த  சாண்ட்நர் மற்றும் பிரேஸ்வெல் ஆகியோர்  சிறப்பாக ஆடி அந்த அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் தோல்வியை தழுவுவது போல் இருந்த நியூசிலாந்து இவர்களின் ஆட்டத்தால் வெற்றியின் பக்கம் திரும்பியது . ஏழாவது விக்கெட்டுக்கு இவர்கள் கூட்டாக சேர்ந்து 162 ரன்களை அடித்தனர். இதனால் போட்டி பரபரப்பானது.

சாண்ட்நர் ஆட்டம் இழந்த போதும்  இறுதி வரை நின்று சிறப்பாக ஆடிய பிரேஸ்வெல் 78 பந்துகளில்  140 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 10 சிக்ஸர்களும் 12 பவுண்டரிகளும் அடக்கம். இது அவரது இரண்டாவது சதமாகும்.

இவரின் இந்த சிறப்பான ஆட்டத்தால்  இந்திய  அணி  போராடி வெற்றி பெற வேண்டி இருந்தது. நான்கு பந்துகளுக்கு  13 ரன்கள் தேவை என்ற  பரபரப்பான சூழ்நிலையில் தாக்கூர்  இவரை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழக்க செய்தார். இதன் காரணமாக  இந்தியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம்  ஏழாவது இடத்தில் களமிறங்கி அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை  இந்தியாவின் எம்எஸ்.தோனியுடன்  பகிர்ந்து கொண்டார் பிரேஸ்வெல். இதற்கு முன்னதாக எம்எஸ்.தோனி தான்  ஏழாவது இடம் அதற்கு கீழாக களமிறங்கி ஒன்றுக்கு மேற்பட்ட சதங்களை அடித்திருந்தார். இந்தப் போட்டியில் பிரேஸ்வெல் தனது இரண்டாவது சதத்தை அடித்ததன் மூலம் அந்த சாதனையை  சமன் செய்துள்ளார்.