இங்கிலாந்து அணி பற்றிய நாசர் ஹுசைன் கருத்துக்கு.. கெவின் பீட்டர்சன் காட்டமான பதிலடி.. பரபரப்பாகும் உலக கோப்பை களம்!

0
3007
Hussain

நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து நேற்று இலங்கை அணி இடம் தோல்வி அடைந்து தற்பொழுது லீக் சுற்று உடன் உலகக் கோப்பையை விட்டு வெளியேறும் நிலையில் இருக்கிறது.

இங்கிலாந்து அணியின் இந்தத் தோல்விக்கு பலரும் பல விதமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். மிகக்குறிப்பாக இங்கிலாந்து அணியின் அதிரடி அணுகுமுறைதான் இந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணம் என்று பலரால் கூறப்படுகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக மட்டுமே தங்களுடைய வழக்கமான அதிரடி முறையில் விளையாடினார்கள். அதற்குப் பிறகான போட்டிகளில் அவர்கள் அப்படி செல்லவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் தோல்விகள் என்பதைத் தாண்டி படுதோல்விகளை சந்திக்கின்ற காரணத்தினால் இங்கிலாந்து அணி மீதான விமர்சனம் மிக அதிகமாக இருப்பதோடு கொஞ்சம் கடுமையாகவும் வந்து கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் இங்கிலாந்து அணி மீதான தன்னுடைய விமர்சனத்தை வைக்கும் பொழுது “நடந்து முடிந்த பிறகு புத்திசாலித்தனமாக யோசிப்பது எளிதான விஷயம். இந்த அணியில் பில் சால்ட், வில் ஜாக்ஸ் மற்றும் பென் டக்கட் ஆகியோரை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்று சொல்ல முடியும்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களை நான் யாருக்காகவுமே மாற்றி இருக்க மாட்டேன். ஆனால் இப்பொழுது நான் அணியை மாற்றுவது குறித்து நிச்சயம் யோசிப்பேன். ஏனென்றால் சகாப்தம் முடிவுக்கு வந்தது போல் இருக்கிறது!” என்று கூறியிருந்தார்.

தற்பொழுது நாசர் ஹுசைன் கருத்துக்கு பதில் அளித்து பேசி உள்ள இங்கிலாந்து மற்றும் ஒரு முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது “இந்த இங்கிலாந்து வெள்ளை பந்து அணி பல ஆண்டுகளாக நமக்கு முழுமையான மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்திருக்கிறது. நான் தற்பொழுது சகாப்தம் முடிந்து விட்டது என்பது போலான எதிர்மறையான கருத்துக்களை பார்க்கிறேன்.

இதுதான் வாழ்க்கை. நீங்கள் தேவையில்லாமல் பழி போட வேண்டாம். நீங்கள் அப்படி கூறுவதாக இருந்தால், அது உண்மையில் சங்கட்டத்தை உருவாக்க கூடிய ஒன்றாக இருக்கும்!” என்று கொஞ்சம் கடுமையாக கூறியிருக்கிறார்.