சென்னை அணி வெளியேற்றிய இரண்டாவது நாளில் செஞ்சுரி அடித்த ஜெகதீசன் – தொடர்ந்து 3வது சதம்!

0
950

விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து மூன்றாவது சதம் அடித்து அசத்தி வருகிறார் தமிழக வீரர் என் ஜெகதீசன்.

உள்ளூர் 50 ஓவர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அணி அசத்தி வருகிறது. குறிப்பாக தமிழக அணியின் துவக்க ஜோடி ஜெகதீசன் மற்றும் சுதர்சன் இருவரும் தொடர்ச்சியாக சதம் மற்றும் அரைசதம் விலாசி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான துவக்கம் அமைத்து கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

இன்று நடைபெற்ற கோவா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, முதலில் களமிறங்கிய தமிழக அணிக்கு ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் மீண்டும் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் ஜெகதீசன் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விலாசி சதம் அடித்தனர்.

ஜெகதீசன் 140 பந்துகளில் 168 ரன்கள் அடித்து துரதிஷ்டவசமாக இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் அடங்கும். மற்றொரு துவக்க வீரர் சாய் சுதர்சன் 112 பந்துகளில் 117 ரன்கள் அடித்தார். இவர் 13 பவுண்டரிகள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 244 பந்துகளில் 276 ரன்கள் சேர்த்தது. ஐம்பது ஓவர்கள் முடிவில் தமிழக அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

அடுத்ததாக பேட்டிங் செய்து வரும் கோவா அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து சரியாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது. 35 ஓவர்களில் மூன்று விக்கெட்ட இழப்பிற்கு வெறும் 184 ரன்கள் மட்டுமே அந்த அணி விளையாடி வருகிறது.

கோவா அணி வெற்றி பெற இன்னும் 90 பந்துகளில் 190 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று வந்த ஜெகதீசன் வாய்ப்புகள் கிடைக்காமல் திணறி வந்தார். ஓரிரு போட்டிகள் மட்டுமே துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். ஆனால் அதுவும் முக்கியமான போட்டிகளாக இருந்ததில்லை.

2023 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடருக்கு முன்பு நடக்கும் இதில் பங்கேற்பதற்கு முன்னர் சென்னை அணி மொத்தம் 6 வீரர்களை வெளியேற்றியது. அதில் ஜெகதீசன் பெயரும் இருந்தது. ஜெகதீசனை வெளியேற்றிய இரண்டாவது நாளில் அவர் இப்படி சதம் அடித்திருப்பது சென்னை அணிக்கு ஏமாற்றமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.