இந்திய அணியின் நீண்ட வருட கனவை நனவாக்க முடியும் ; என்னுடைய ஒரே குறிக்கோள் அதுதான் – தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

0
226
Dinesh Karthik

கடந்த ஆண்டு வரை கொல்கத்தா அணியில் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு பெங்களூரு அணியில் அதிரடி பினிஷராக விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகம் அவரை 5 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது.

பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் மிக அற்புதமாக விளையாடி இருக்கிறார். 6 போட்டிகளில் மொத்தமாக 197 ரன்கள் குவித்திருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கின் ஸ்ட்ரைக் ரேட் 209.57ஆக உள்ளது.

- Advertisement -

குறிப்பாக நேற்று இரவு டெல்லி அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 34 பந்துகளில் 64 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று பெங்களூர் அணி வெற்றி பெற இவரே முழு காரணம். ஏபி டிவில்லியர்ஸ் இடத்திலிருந்து அவருடைய பணியை தற்போது பெங்களூர் அணிக்கு தினேஷ் கார்த்திக் செய்து கொண்டிருக்கிறார்.

இந்திய அணி கோப்பையை வெல்ல நான் உதவி செய்வேன்

2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த முடிந்த ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் இடம் பெறவில்லை. தற்பொழுது பேசியுள்ள தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் தான் பங்கேற்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

“2013-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணி ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் எந்த ஒரு தொடரை வென்றதில்லை. நீண்ட வருடங்களாக இது தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்திய அணிக்கு விளையாடுவதே எப்பொழுதும் என்னுடைய முழு நோக்கமாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடைபெற இருக்கிறது. அதில் நான் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்.

- Advertisement -

ஐசிசி உலக கோப்பை தொடர்களில் இடம் பெற்று விளையாடுவதற்கு முன்னர், நீங்கள் பல விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்று தர நிச்சயமாக நான் உதவி புரிவேன். அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் இவை அனைத்தையும் என் மனதில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதற்கான பயிற்சியை நான் எடுத்துக் கொண்டு வருகிறேன். நான் இன்று சிறப்பாக விளையாடுவதற்கு எனக்கு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருந்த என்னுடைய பயிற்சியாளருக்கு நன்றி. வயதாகும் பொழுது நாம் ஆரோக்கியமாக இருப்பது மிக மிக முக்கியம். என்னால் முடிந்தவரை என்னுடைய உடலை நான் எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கையுடன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.