“நான் வாங்கப்பட்டதும் என் அம்மா, பாட்டி அழுதுவிட்டார்!” – ஹாரி ப்ரூக் நெகிழ்ச்சி பேட்டி!

0
684
BROOK

உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் மினி ஏலம் இன்று மிகவும் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் நடந்து முடிந்திருக்கிறது!

இன்றைய ஏலத்தில் எதிர்பார்த்த சில வீரர்கள் குறைவான தொகைக்கும், சில வீரர்கள் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் வாங்கப்படாத விலைக்கும் ஏலம் போய் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறார்கள்!

இந்த மினி எழுத்தில் ஒவ்வொரு அணிகளும் மெகா ஏலத்தில் உருவாக்கப்பட்ட அணியில் இருந்த குறைகளை சரி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்!

தற்பொழுது 3 வடிவ கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரராக உருவெடுத்துவரும் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக்கை ஹைதராபாத் அணி 13.5 கோடிக்கு வாங்கி இருக்கிறது!

ஏலத்தின் போது 13 கோடி மட்டுமே கையில் வைத்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத் அணியின் காசை கரைப்பதற்காக இவரை ஏலத்தில் தனது 13 கோடி வரை கேட்டு விலையை உயர்த்தி விட்டது.

முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் கையில் இருந்த பணம் தீர்ந்த பொழுதே ஹைதராபாத் அணியால் இவரை வாங்க முடிந்தது. இந்த விதத்தில் இவர் ராஜஸ்தான் ராயல் அணிக்கு கடமைப்பட்டு இருக்கிறார் என்றே கூறலாம்.

ஏலத்தில் நல்ல விலைக்குப் போயிருக்கும் ப்ரூக் இதைப் பற்றி பேசும் பொழுது ” நான் வார்த்தைகளை அப்போது இழந்து விட்டேன். ஏலத்தின் போது நான் என் அம்மா மற்றும் பாட்டியுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். ஹைதராபாத் அணி என்னை வாங்கியதும் என் அம்மாவும் பாட்டியும் அழுதார்கள். ஹைதராபாத் அணிக்கு எனது நன்றி!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து அவர் பேசும் பொழுது
” ஹாய் ஆரஞ்சு ஆர்மி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு நான் வருவதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நான் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைக்கும் மைதானங்களில் ஒன்று என்று கேள்விப்பட்டேன். அதனால் நான் அங்கு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!” என்று கூறியுள்ளார்!