“ஆமா.. நான் சரியா ஆடல; ஆனால் என்னோட ஒரே டார்கெட் இதுதான்” ஒரு வழியாக மோசமாக பார்ம் குறித்து வாயைத்திறந்து பேசிய விராட் கோலி!!

0
122

‘மோசமாகத்தான் விளையாடி வருகிறேன். ஆனால் எனது எண்ணம் எல்லாம் இது மட்டுமே’ என்று தனது சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசி இருக்கிறார் முன்னாள் கேப்டன் விராட் கோலி.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் சந்தேகம் இன்றி முதலிடத்தில் இருந்து வந்தவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 25,000 மேற்பட்ட ரண்களை அடுத்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க விதமாக 70 சதங்களை அடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு சுமார் 80 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம் கூட இவர் அடிக்கவில்லை. மேலும் இவரது சராசரியும் நாளுக்கு நாள் கீழே சென்று கொண்டிருக்கிறது. 

- Advertisement -

கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி விட்டார். ஆகையால் எந்த நேரம் வேண்டுமானாலும் அணியில் இவர் நீக்கப்படலாம். ஏனெனில் பேட்டிங்கில் போதிய அளவிற்கு பங்களிக்கவில்லை. இவரது இடத்தை நிரப்ப பல இளம் வீரர்களும் வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றனர். விராட் கோலி போன்ற அனுபவம் மிக்க வீரர் அணியில் இருப்பது மிகுந்த பலம் அளிக்கும் என்பதால் தேர்வு குழுவினர் இவரை தொடர்ந்து விளையாட வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது பார்ம் குறைந்ததற்கு என்ன காரணம்?, மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் என்ன செய்வதற்கு திட்டமிட்டுள்ளேன்? என பல கேள்விகளுக்கு விராட் கோலி தனது பேட்டியின் மூலம் பதில் அளித்திருக்கிறார்.

“இந்திய அணிக்காக 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை இரண்டிலும் மிகச் சிறந்த பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதே எனது ஒரே குறிக்கோள் ஆகும்”என்றார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் மேற்கத்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்தும் பேசிய அவர், “கடந்த சில வருடங்களில் நிறைய நடந்துவிட்டது. மனதளவிலும் இதன் தாக்கம் நிச்சயம் இருக்கும். இல்லை என்று மறுப்பதற்கு இல்லை. விரைவில் அணிக்கு என்ன தேவையோ, அதை கொடுப்பதற்கு தயாராகி வருகிறேன். மிகப்பெரிய வேலைப்பளுவில் இருந்து விடுபட்டு இருப்பதால் சற்று இலகுவாக இருக்கிறது. விரைவில் பேட்டிங்கில் கவனம் செலுத்தி வெற்றிக்கு பங்களிப்பேன்.” என்றார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி டி20 போட்டிகளில் வெறும் 12 ரன்கள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 33 ரன்கள் என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் கேப்டன் கோலி எந்த அளவிற்கு தனது பார்மை திரும்ப கொண்டு வருகிறாரோ, அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பாக அமையும்.