அதைவிட முக்கியமான வேலைகள் எனக்கு இருக்கு -சோயிப் அக்தர் பற்றிய கேள்விக்கு உம்ரான் மாலிக் பதில்

0
1103

இந்திய அணியின் இளம் வேகபந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் 2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் போது நெட் பௌலராக இருந்த இவர் மாற்று வீரராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்தார். அந்தத் தொடரில் இவர் பந்து வீசிய வேகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது . இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணியாவில் தக்க வைக்கப்பட்டார்.

2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர்களில் ஹைதராபாத் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடிய இவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்த இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்தார் . அதன் பிறகு அயர்லாந்து சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் இடம் பிடித்த உம்ரான் மாலிக் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வை தொடங்கினார். சமீபத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக பந்து வீசினார்.

- Advertisement -

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பை காண 20 பேர் கொண்ட பட்டியலில் உம்ரான் மாலிக்கும் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . நாளை நடைபெற இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் உம்ரான் மாலிக். அவரிடம் பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர்கள் நீங்கள் சோயிப் அக்தரின் அதிவேகப் பந்துவீச்சு சாதனையை முறியடிப்பீர்களா என்று கேட்டனர்.அதற்கு பதில் அளித்த உம்ரான் மாலிக் இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசி அதிக விக்கெட்களை வீழ்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு . நான் பந்து வீசும் போது இந்த மாதிரியான லைன் அண்ட் லென்தில் பந்து வீசலாம் எவ்வாறு விக்கெட்டுகளை வீழ்த்துலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருப்பேன் என்று கூறினார் .

மேலும் நாம் எவ்வளவு வேகத்தில் பந்து வீசுகிறோம் என்பதெல்லாம் போட்டி முடிந்த பின்பு தான் எங்களுக்கு தெரிய வரும் . அதனால் போட்டியின் போது ஒரு பந்துவீச்சாளராக எதை செய்ய வேண்டுமோ அதை செய்யத்தான் முயற்சிப்பேன் என்று கூறியிருக்கிறார் . இந்திய அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்துவது என்னுடைய முதல் இலக்கு என்று தெரிவித்துள்ளார் . பாகிஸ்தான் அணியின் சோயிப் அக்தர் தான் உலகிலேயே அதிக வேகத்தில் பந்து வீசிய முதல் பந்துவீச்சாளர் ஆவார் .
இவர் 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மணிக்கு 161 கிலோமீட்டர் வேகத்தில் வீசி உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தியாவின் உம்ரான் மாலிக் இவரும் சோயிப் அக்தர் போலவே ஒரு அதிவேகப் பந்துவீச்சாளர் மணிக்கு 150 கிலோமீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீசி வருகிறார் . இதனால் இவரை அடிக்கடி சோயாக்தருடன் ஒப்பிட்டு பேசுவது வழக்கமாக இருக்கிறது. சுயபக்தரும் அடிக்கடி உம்ரான் மாலிக் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுவரை 17 ஐபிஎல் போட்டிகளில் ஆடி உள்ள உம்ரான் மாலிக் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் . மேலும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியுள்ள அவர் அதில் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் . டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக மூன்று போட்டிகளில் ஆடி உள்ள உம்ரான் மாலிக் இரண்டு விக்கெட் களையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . சமீபத்திய நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இவர் சிறப்பாக பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது .