என் வயசு அவர் அனுபவம் ; ஜோ ரூட் சச்சின் குறித்து நெகிழ்ச்சி!

0
2415
Joe Root

இங்கிலாந்து அணிக்காக தற்போது விளையாடி வருபவரும், இங்கிலாந்து கிரிக்கெட்டின் அடையாள வீரர்களாக திகழக்கூடியவருமான ஜோரூட்டுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் ஒரு அதிசயமான ஒற்றுமை இருக்கிறது!

அது என்னவென்றால் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது இந்தியாவிற்கு எதிராகத்தான். 2012 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா வந்த இங்கிலாந்து அணியில் புதுமுக வீரராக வந்த அவர் அந்த ஆண்டில் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக அறிமுகமானார். அடுத்து 2013 ஜனவரி மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக அறிமுகமானார்!

ஜோ ரூட் தற்பொழுது இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பெருமை மிகுந்த பட்டியலில் இணைந்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது வரை 28 செஞ்சுரிகள் அடித்து இருக்கும் இவர், சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாய் அடித்துள்ள 51 சதங்களை தாண்டக்கூடிய வாய்ப்பு இருக்கக்கூடிய வீரர் என்று பார்க்கப்படுகிறது.

தற்பொழுது ஜோ ரூட் இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியில் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று வந்தாலும், இளம் வீரர்களான டக்கெட் மற்றும் ஹாரி புரூக் போன்றவர்களது வருகை இவரை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறது. எனவே இவர் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்காக ஐபிஎல் மினி ஏலத்தில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் உலக கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் சச்சின் குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்து இருக்கிறார் அவர் கூறும் பொழுது ” இப்பொழுது பல அற்புதமான வீரர்கள் விளையாடுகிறார்கள். ஆனால் சச்சின் சாதித்ததை பாருங்கள். இது உண்மையில் குறிப்பிடத்தக்க சாதனை. நீண்ட காலம் விளையாடியது குறைந்த வயதில் அறிமுகம் ஆனது என்று அவரது திறன் பெரியது. மேலும் இதைக் கொண்டு விளையாட்டில் தொடர்ந்து முன்னேற வேண்டும் முக்கியமாக தக்க வைக்க வேண்டும் என்பது சாதாரணம் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அவர் தனது தோள்களில் அழுத்தத்தை அதிக நேரங்கள் சுமந்து இருக்கிறார். மேலும் அவர் அதை 20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தார். நான் பிறந்து எனது அறிமுக கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடும் முன்பே அவர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாட ஆரம்பித்தவர். இது அவர் எப்படி எதற்காக இருந்தார் என்பதை காட்டுகிறது. இந்த விளையாட்டில் அவர் உண்மையிலேயே மிகச் சிறந்தவர். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கும் அல்ல உலக கிரிக்கெட்டுக்கும் பங்காற்றி இருக்கிறார்!” என்று கூறியுள்ளார்!

வெளிநாடுகள் நடத்தும் டி20 கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து பேசிய அவர் ” எனது வெள்ளை பந்து ஆட்டத்தை மேலும் மேம்படுத்த விரும்புகிறேன். எனது 50 ஓவர் கிரிக்கெட் பேட்டிங்கில் நான் ஏதாவது சேர்க்க வேண்டி இருந்தால் அது டி20 கிரிக்கெட்டில் நான் விளையாடுவதின் மூலமாகவும், பயிற்சி செய்வதன் மூலமாகவும், அடிக்கடி எனக்கு வாய்க்காத சூழ்நிலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதின் மூலமாகவும் நான் செய்ய முடியும்” என்று கூறி இருக்கிறார்!