ஐபிஎல்

இந்த இலங்கை வீரரை ஏலம் எடுக்க ஐ.பி.எல் அணிகள் முன்வரவேண்டும் – முத்தையா முரளிதரன் பேட்டி

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூரியகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்திய பின்பு அவரது பந்து வீச்சுக்கு ஈர்க்கப்பட்டுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான முத்தையா முரளிதரன். இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஹசரங்காவை ஐபிஎல் அணிகள் ஏலம் எடுக்க முன்வர வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார் இதுகுறித்து இவர் கூறுகையில்.

- Advertisement -

“இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் பங்களாதேஷ் இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையேயான தொடர்களில் தோல்வியை தழுவிய போதிலும் இவரது பேட்டிங் மற்றும் ஸ்பின் பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார் . லெக் ஸ்பின்னர் ஆக இருக்கும் இவரை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்க முன்வரவேண்டும் ஐபிஎல் அணிகள் வெளிநாட்டு ஸ்பின்னர்களை அதிகம் பயன்படுத்துவது கிடையாது உள்நாட்டு ஸ்பின்னர்களை அதிகமாக பயன்படுத்துவதால் வெளிநாட்டு ஸ்பின்னர்களுக்கு அணியில் இடம் கிடைப்பதில்லை . ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க கூடிய சூழ்நிலையில் நான்கு வீரர்களும் நட்சத்திர வீரராக இருக்க வேண்டும் என்று அந்த அணி எதிர்பார்க்கிறது .

குறிப்பாக அவர்கள் நட்சத்திர பேட்ஸ்மேனாகவோ அல்லது நட்சத்திர பவுலராகவோ நட்சத்திர ஆல்ரவுண்டராகவோ என்ற பட்டியலில் எதிர்பார்க்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் வெளிநாட்டு ஸ்பின்னர்களை களமிறக்க ஐபிஎல் அணிகள் சற்று யோசிக்கிறது. இதன் காரணமாகவே ஸ்பின்னர்களை பொருத்தவரை வெளிநாட்டு ஸ்பின்னர்கள் இல்லாமல் இந்திய ஸ்பின்னர்களையே அதிகம் ஐ.பி.எல் அணிகள் நம்புகிறது.

ஹசரங்கா 50 ஓவர் கிரிக்கெட் காட்டிலும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார் அவர் இதுவரை 19 டி20 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ஹசரங்கா இந்த ஆண்டில் மட்டும் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 340 ரன்களுடன் 8 விக்கெட்டையும் ஏழு டி20 போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரது பந்து வீச்சு எக்கானமி 4 என்ற கணக்கில் இருப்பது சிறப்பு.

- Advertisement -

அடுத்த ஆண்டு ஐபிஎலில் 2 புதிய அணிகள் விளையாட இருப்பதினால் ஹசரங்காவிற்க்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரை ஸ்பின்னர் என்ற வகையில் பட்டியல் கருதாமல் ஆல்ரவுண்டர் என்ற வகையில் பட்டியலில் கருதிட்டு ஐபிஎல் அணிகள் இவரை ஏலத்தில் எடுக்க முன்வர வேண்டும் ” என்று முத்தையா முரளிதரன் தனியார் கிரிக்கெட் தளத்திற்கு பிரத்யோகமாக பேட்டியளித்துள்ளார்.