ரசிகர் கேட்ட கேள்விக்கு தோனியைப் புகழ்ந்து பதிலளித்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்

0
185
Anirudh and MS Dhoni

இன்றைய தேதியில் கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் ரவிச்சந்தர் தான். அவர் பியானோவில் கை வைத்து விட்டாலே அந்த பாடல் ஹிட் ரகம் தான். அந்த அளவுக்கு அவர் மெட் அமைக்கும் ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகி கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் அவர் மொத்தமாக 7 திரை படங்களில் இசையமைத்து கொண்டிருக்கிறார். மிக பிஸியாக சற்று அதிக வேலை சுமையுடன் அவர் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறார்.

- Advertisement -

அதைச் சுட்டிக்காட்டி அவருடைய ரசிகர் ஒருவர் ட்விட்டர் வலைதளத்தில் “அதிக வேலைச் சுமையை எவ்வாறு சமாளிப்பது மற்றும் அதிலிருந்து எப்படி நாம் கடந்து வருவது என்று தயவுசெய்து ஐடியா கொடுங்கள் அனிருத் ரவிச்சந்தர்”, என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மகேந்திர சிங் தோனி பாணியில் கூலாக பதில் சொன்ன அனிருத்

ரசிகர் கேட்ட அந்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே “நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசித்துக்கொண்டே செய்ய வேண்டும்”, என்று பதில் அனுப்பியிருந்தார். அந்த பதிவில் மகேந்திர சிங் தோனி கிஃப் ஒன்றையும் இணைத்து அனிருத் ரவிச்சந்தர் பதில் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் தோனி கிஃபை பயன்படுத்திய அனிருத் ரவிச்சந்தர்

2005ஆம் ஆண்டு இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 298 ரன்கள் குவிக்க, பின்னர் 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது இன்னிங்ஸை விளையாட தொடங்கும்.

- Advertisement -

அந்தப் போட்டியில் மகேந்திர சிங் தோனி 145 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் பத்து சிக்ஸர் விளாசி 183* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருப்பார். இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விடும்.

அந்தப் போட்டியில் மகேந்திரசிங் தோனி சதம் அடித்தவுடன் தனது பேட்டை துப்பாக்கி போல தாங்கிப் பிடித்து, சுடுவது போல பாவனை செய்வார். அவர் அவ்வாறு கொண்டாடிய அந்த தருணம் இன்று வரை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் பலராலும் ரசிக்கப்படும். துப்பாக்கி போல அவர் சுடும் அந்த பாவனை கிஃப் வடிவில் இன்றும் பல ரசிகர் மத்தியில் பயன்பாட்டில் உள்ளது.

அந்த கிஃபை அனிருத் ரவிச்சந்தர் தனது ரசிகரின் கேள்விக்கு பயன்படுத்தியதால் மகேந்திர சிங் தோனி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.