மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பெரும்புள்ளி நீக்கம்; யார் யார் உள்ளே? வெளியே? – முழு லிஸ்ட்!

0
743

மும்பை அணி வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை இங்கே காண்போம்.

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை பரிமாற்றம் மற்றும் அணியில் இருந்து வெளியேற்றம் செய்ய நவம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசத்தை ஒவ்வொரு அணிக்கும் கொடுத்து இருக்கிறது ஐபிஎல் நிர்வாகம்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் தங்களது திட்டத்திற்கு பயன்படாத வீரர்களை வெளியேற்றி, தேவையான வீரர்களை மாற்ற அணியிலிருந்து பரிமாற்றம் செய்துகொள்கின்றனர். அந்த வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி யார் யாரை வெளியேற்ற உள்ளது? யார் யாரை தக்கவைக்கிறது? என்கிற முழு விபரத்தை பார்ப்போம்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு பந்துவீச்சு சற்று சிக்கலாக இருந்தது. ஏலத்தில் ஜோப்ரா ஆர்ச்சரை எடுத்தனர். ஆனால் அவர் காயத்தினால் விளையாடவில்லை. மற்ற சில பந்துவீச்சாளர்களும் எடுபடவில்லை. பிளே-ஆப் சுற்றுக்கே தகுதி பெறாமல் வெளியேறியது.

இதனைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பெஹரண்டாஃப்-ஐ பெங்களூர் அணியில் இருந்து வீரர்கள் பரிமாற்றம் முறைப்படி எடுத்திருக்கிறது மும்பை அணி.

அடுத்ததாக இந்த வருடம் வெளியேற்றப்படும் வீரர்களின் சில முன்னணி வீரர்களின் பெயர்களும் இருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து மும்பை அணியின் அங்கமாக இருந்து வரும் கீரன் போல்லார்டு இம்முறை வெளியேற்றப்படுகிறார் என தெரியவந்திருக்கிறது.

வெளியேற்றப்பட்ட வீரர்களின் வரிசையில் மயங்க் மார்க்கண்டே, ஃபாபியன் ஆலன், கீரன் போல்லார்டு, ஹ்ரித்திக் ஷூக்கன், தைமல் மில்ஸ் ஆகியோரின் பெயர்கள் இருக்கிறது.

தற்போது வரை தக்கவைக்கப்பட்ட வீரர்களில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், பும்ராஹ், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், டேவால் பிரேவிஸ், டானி சாம்ஸ், திலக் வர்மா, ட்ரிஸ்டன் ஸ்டாப்ஸ் ஆகியோரின் பெயர்கள் இருக்கிறது.