மீதம் இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு தவால் குல்கர்னியை ஒப்பந்தம் செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் – காரணம் இதுதான்

0
792
Dhawal Kulkarni Mumbai Indians

இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசன் சில இரசிகர்களுக்கு ஆச்சரியமானதாகவும், சில இரசிகர்களுக்கு அதிர்ச்சியானதாகவும் அமைந்திருக்கிறது. அத்தோடு பல முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர்களின் கணிப்புகளையும் உடைத்து, வேறொரு பாதையில் பயணிதுக்கொண்டிருக்கிறது.

காரணம், ஐ.பி.எல்-ன் மிகப்பெரிய அணிகளும், இந்திய நட்சத்திர வீரர்களும் சரிவை சந்தித்திருக்கிறார்கள். புதிய அணிகள் இரண்டும், சில இந்திய இளம் வீரர்களும் மிகப்பெரியளவில் எழுந்திருக்கிறார்கள். இதுதான் பல பிரபலமான முன்னாள் வீரர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கி, சில இரசிகர்களை ஆச்சரியப்படுத்தியும், சில இரசிகர்களை அதிர்ச்சியடையவும் வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த எதிர்பாராத சம்பவங்களில் மிக முக்கியமானது, ஐ.பி.எல் கோப்பைகளை அதிகமுறை கைப்பற்றிய மும்பை இன்டியன்ஸ் அணியின் சரிவுதான். இதுவரை எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை எட்டிலும் தோல்வியைச் சந்தித்து, முதல் எட்டு ஆட்டங்களில் முதல்முறையாகத் தோல்விகளைச் சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையையும் படைத்திருக்கிறது.

மும்பை அணியின் முக்கிய பலகீனமென்று பார்க்கும் பொழுது, அந்த அணியின் பந்துவீச்சுதான் இருக்கிறது. பும்ராவை தவிர வேறு யாரையும் நம்பமுடியாமல் கேப்டன் ரோகித் ஷர்மா தவிக்கிறார். இந்த தொடர் தோல்விகளால் மனநிலையில் நம்பிக்கை குறைந்தது அவரது பேட்டிங்கும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பந்துவீச்சு பலகீனத்தைச் சரிகட்டும் பொருட்டு, இந்திய வேகப்பந்து வீச்சாளரான 33 வயதான மும்பையைச் சேர்ந்த தவால் குல்கரினியை, இந்த சீசனின் மிச்சமிருக்கும் போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. தவால் குல்கர்னி ஐபிஎலில் மொத்தம் 92 போட்டிகளில் 86 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். பெரும்பாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ள இவர் சில ஆட்டங்கள் மும்பை இன்டியன்ஸ் அணிக்காகவும், குஜராத் லயன்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார். இவர் இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகள், 2 ட்வென்ட்டி ட்வென்ட்டி போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -