3 கோல்டன் டக்.. ரோகித் சாகல் செய்த வித்தியாசமான சாதனை.. ராஜஸ்தானிடம் சுருண்டது மும்பை இந்தியன்ஸ்

0
103
IPL2024

2024 17 வது ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல்முறையாக சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் சாம்ஸ் முலானிக்கு பதிலாக ஆகாஷ் மதுவால் சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் சந்திப் சர்மா காயம் அடைய, தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் நன்ட்ரே பர்கர் நேரடியாக அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் இம்பேக்ட் பிளேயராக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மும்பை இந்தியன் அணி புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்றது பெரிய நெருக்கடியை உருவாக்கி இருந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா 0, நமன் திர் 0, டிவால்ட் பிரிவியஸ் 0 ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினார்கள். மேலும் இவர்கள் மூவரும் தங்கள் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்தார்கள்.

இதற்கு அடுத்து 2 பவுண்டரி 1 சிக்சர் அடித்து நம்பிக்கை தந்த இசான் கிஷான் 14 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. நெருக்கடியான நேரத்தில் ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஹர்திக் பாண்டியா 34 (21) ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து இன்னொரு முனையில் பொறுமையாக விளையாடிய திலக் வர்மா 32 (29) ரன்களில் வெளியேறினார். இந்த இரண்டு முக்கிய விக்கெட்டையும் சாகல் கைப்பற்றினார். இதற்கு அடுத்து பியூஸ் சாவ்லா 3 (6), ஜெரால்டு கோட்சி 4 (9), டிம் டேவிட் 17 (24), பும்ரா 8* (9), ஆகாஷ் மதுவால் 4* (5) ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இதையும் படிங்க : W,W,W.. இம்பேக்ட் பிளேயர்.. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. மும்பைக்கு நடந்த சோகம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட் 4 ஓவர்கள் 22 ரன்கள் தந்து 3 விக்கெட், சாகல் 4 ஓவர்கள் 11 ரன்கள் தந்து 3 விக்கெட், நன்ட்ரே பர்கர் 4 ஓவர்கள் 32 ரன்கள் தந்து 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த போட்டியில் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி, 17 முறை டக் அவுட் ஆகி ஐபிஎல் தொடரில் மோசமான சாதனை படைத்திருக்கும் தினேஷ் கார்த்திக்கை சமன் செய்தார். இதேபோல் ஐபிஎல் தொடரில் சாகல் இன்று மூன்று விக்கெட் கைப்பற்றியதின் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக முறை மூன்று விக்கெட் கைப்பற்றி இருந்த பும்ராவின் சாதனையை சமன் செய்தார். இவர்கள் இருவரும் இருபது முறை ஐபிஎல் தொடரில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.