காயம் காரணமாக டைமால் மில்ஸ் விலகல் ; 21 வயது தென்னாபிரிக்க வீரரை மாற்று வீரராக தேர்வு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ்

0
777
Tristan Stubbs replaces Tymal Mills

ஐ.பி.எல் வரலாற்றில் எந்த சீசனும் இல்லாத அளவுக்கு, இந்த சீசனின் மிகப்பெரிய சரிவை சந்தித்திருங்கிறது, உலகின் நம்பர் 1 20/20 அணியான மும்பை இன்டியன்ஸ் அணி. நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இஷான் கிஷனுக்கு 15 கோடிக்கும், ஆடாத ஆர்ச்சருக்கு 8 கோடிக்கும், டிம் டேவிட்டுக்கு 8 கோடிக்கும் போனது மும்பை இன்டியன்ஸ் அணியின் சரிவாக அமைந்தது.

இப்படி சில வீரர்களின் மேல் பெரியளவில் முதலீடு செய்ததால், மும்பை இந்தியன்ஸ் அணியால் பவுலிங் யூனிட்டை வலிமையாக உருவாக்க முடியவில்லை. குறிப்பாக ஸ்பின் யூனிட் மிக பலகீனமாக இருந்தது. யுஸ்வேந்திர சஹலுக்கு ஏலத்தில் போய் பின்பு பின்வாங்கியதிற்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் இப்போது வருத்தப்படும். பும்ராவை தவிர பாஸ்ட் பவுலிங் யூனிட்டில் யாரும் மும்பை அணிக்கு வலு சேர்ப்பவர்களாக இல்லை. இதனால் சமீபத்தில் இந்திய பாஸ்ட் பவுலரான தவால் குல்கர்னியை அணியில் சேர்த்திருந்தது மும்பை அணி. கூடவே ஸ்பின்னர் கார்த்திகேயாவையும் கொண்டு வந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது மும்பை அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து லெப்ட்-ஹேன்ட் பாஸ்ட் பவுலர் டைமல் மில்ஸ் கணுக்கால் காயத்தால் மொத்தமாக இந்த ஐ.பி.எல் சீசனிலிருந்து வெளியேறுகிறார் என்று தெரிய வருகிறது. இந்தத் தொடரில் டைமல் மில்ஸ் ஐந்து ஆட்டங்கள் விளையாடி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் ரன்களை நிறைய கசியவிட்டு விட்டார். ஆரம்பத்தில் டைமல் மில்ஸ் அவரது மெதுவான பந்துகளில் மிகத் திறமையானவராக இருந்தார். இதனால் மிடில் அன்ட் டெத் ஓவர்களில் இவரது பங்களிப்பு பெரிதாக இருந்தது. ஆனால் தற்போது இவரது மெதுவான பந்துகளின் கூர்மை குறைந்து, பேட்ஸ்மேன்கள் எளிதாய் கணித்து அடிக்கும் விதத்தில்தான் இருக்கிறது.

தற்போது இவருக்குப் பதிலாக, அடிப்படை விலையான இருபது இலட்ச ரூபாய்க்கு, செளத் ஆப்பிரிக்க மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸை கொண்டுவந்து உள்ளது மும்பை அணி நிர்வாகம். இவர் 17 இருபது ஓவர் போட்டிகளில் 506 ரன்களை குவித்துள்ளார். 157 என்ற சிறப்பான ஸ்ட்ரைக்ரேட்டை கொண்டிருக்கிறார். செளத் ஆப்பிரிக்காவின் உள்நாட்டு கிளப் அணியான வாரியர்ஸ் அணிக்காக விளையாடும் இவருக்கு இந்த வருட டொமஸ்டிக் ரெகார்டும் சிறப்பாகவே இருக்கிறது. வாரியர்ஸ் அணிக்காக சி.எஸ்.ஏ ட்வென்டி ட்வென்ட்டி சேலன்ஞ் தொடரில் 293 ரன்களை, 48.83 ஆவரேஜில், 183.12 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். இந்த வருட ஐ.பி.எல் சீசனில் மும்பைக்கு எஞ்சிருக்கும் ஆட்டங்களில் இவரைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது!