மும்பை அணியில் பங்குபெற்று ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காத 6 வீரர்கள்

0
1203
Phillip Hughes and Alex Hales

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி படைத்த சாதனைகளை அவ்வளவு எளிதில் ஒரு கட்டுரையில் கூறிவிட முடியாது. ஐந்து முறை ஐபிஎல் தொடரை கைப்பற்றிய ஒரே அணி மும்பை அணி தான். குறிப்பாக 2015ஆம் ஆண்டு முதல் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வி பெற்று எஞ்சிய 8 போட்டிகளில் சிறப்பாக விளையாடி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று இறுதியில் கோப்பையை கைப்பற்றியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத்தில் சரியாக விளையாடாத மாதிரி அனைவருக்கும் தோன்றும். ஆனால் தொடர் இறுதியில் சத்தமே இல்லாமல் கோப்பையை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.

மும்பை அணியில் விளையாடிய பல வீரர்களை பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் மும்பை அணியில் கலந்து கொண்டு ஒரு போட்டியில் கூட விளையாடாமல் சென்ற வீரர்களைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, தற்பொழுது அந்த வீரர்களை பற்றி பார்ப்போம்.

1. ஜோஸ் ஹேசல்வுட்

Josh Hazlewood

2014 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹேசல்வுட் பங்குபெற்றார் ஆனால் அந்த தொடரில் அவர் விளையாடினார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அந்த தொடரில் அவர் ஒருமுறை கூட விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு அவர் சிறிது காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறினார். பின்னர் அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்து அணியை சேர்ந்த காலின் முன்றோ மும்பை அணியால் வாங்கப்பட்டார்.

ஹேசல்வுட் இந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாட இருந்தாலும் அவர் பின்னர் பயோ பப்பிள் காரணமாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியதும் பின்னர் அவருக்கு மாற்று வீரராக பெஹ்ரன்டாஃப் அணியில் வந்து கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. காலின் முன்றோ

Colin Munro

முன்னர் குறிப்பிட்டது போலவே 2015ஆம் ஆண்டு இவர் மும்பை அணிக்காக விளையாட வந்தார். ஆனால் இவர் வந்த வருடம் மும்பை அணியில் ஏற்கனவே நல்ல அணி செட் ஆகி இருந்தது. இவர் அடிப்படையில் ஒரு ஓபனிங் பேட்ஸ்மேன்.

அணியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான சிம்மன்ஸ் அதிரடியாக ஆடி கொண்டிருக்கும் வேளையில் அவரை தவிர்த்து விளையாட வைக்க மும்பை அணி நிர்வாகத்தால் முடியவில்லை. சிம்மன்ஸ் அந்த ஆண்டு மிக அற்புதமாக விளையாடிய மும்பை அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக விளங்கினார். எனவே காலின் முன்றோவால் ஒரு போட்டியில் கூட மும்பை அணிக்காக விளையாட முடியாமல் போனது.

3. பிலிப் ஹியூஸ்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான இவரது பெயரைக் கேட்டாலே அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஒரு நிமிடம் அமைதியாகி விடுவார்கள். மிகத் திறமை வாய்ந்த வீரரான இவர் எதிர்பாராதவிதமாக கிரிக்கெட் மைதானத்திலேயே தனது உயிரை இழந்தார். ஆஸ்திரேலிய வீரர் சீன் அபோட் வீசிய பவுன்சர் பந்தில் காயம் ஏற்பட்டு சில மணி நேரத்திலேயே இவரது உயிர் போனது.

இவரது மறைவு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து உலக மக்களையும் கண்கலங்க வைத்தது. இவர் 2013ம் ஆண்டு மும்பை அணி தொடரை வென்ற அணியில் ஒரு வீரராக இருந்தார் இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விதிவசம் இவர் மும்பை அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

4. நிக்கோலஸ் பூரன்

Nicholas Pooran MI

2017 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி பார்த்தீவ் பட்டேல் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரை தனது அணியில் வைத்து இருந்தது. இதில் பார்த்தீவ் பட்டேல் அனைத்து போட்டிகளிலும் விளையாடி அதேசமயம் விக்கெட் கீப்பர் ஆகவும் இருந்தார்.

அவரது நல்ல பார்ம் காரணமாக அனைத்துப் போட்டிகளிலும் அவர் விளையாடும் வாய்ப்பை பெற்றார். எனவே நிக்கோலஸ் பூரனுகு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

5. அலெக்ஸ் ஹேல்ஸ்

இங்கிலாந்து அணியின் அதிரடி ஓபனிங் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆவார். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்தார் கோரி ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக மும்பை அணி நிர்வாகத்தால் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்றைய போட்டியில் இவர் விளையாட பகுதியாக இருந்த வேளையில் மும்பை அணி நல்ல பார்மில் இருந்த சிம்மன்ஸ்சுக்கு விளையாடும் வாய்ப்பை கொடுத்தது. அவரும் மிக அற்புதமாக விளையாடிய மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கினார். எனவே அலெக்ஸ் ஹேல்ஸ்சால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாமல் போனது.

6. குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ் கொல்கத்தா அணியில் விளையாடினார் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அவர் அதற்கு முன்னரே மும்பை அணியில் வீரராக இருந்து இருக்கிறார். 2012 ஆம் ஆண்டு குல்தீப் யாதவ் மும்பை அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும் அணியில் சீனியர் வீரர் ஹர்பஜன் சிங் இருந்த வேளையில் இவருக்கு அவ்வளவாக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பின்னர் கொல்கத்தா அணிக்கு சென்று தற்போதுவரை குல்தீப் யாதவ் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.