மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்; சிஎஸ்கே வீரரை பந்தாடிய பூரன்; 13 சிக்ஸ்.. 137* ரன்.. 55 பந்து!

0
4077
MLC2023

தற்போது அமெரிக்காவில் ஆறு அணிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சீட்டில் ஆர்கஸ் அணியை வென்று மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் வெற்றி பெற்று சாம்பியன் ஆகி இருக்கிறது!

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் முதல் டி20 தொடர் சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஐபிஎல் அணிகளை வாங்கியுள்ள சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய அணி நிர்வாகங்கள் அணிகளை வாங்கி இருந்தன.

- Advertisement -

இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு சீட்டில் ஆர்கஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் கிரீடம் ஆகிய நான்கு அணிகளும் தகுதி பெற்று. ப்ளே ஆப் சுற்றில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் வெளியேறின.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும், வெயின் பர்னல் தலைமையிலான சீட்டில் ஆர்கஸ் அணியும் மோதிக்கொண்டன. முதலில் டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சீட்டில் ஆர்கஸ் அணிக்கு துவக்க வீரராக களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க சர்வதேச அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் அதிரடியில் மிரட்டினார். மொத்தம் 52 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 87 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மேலும் சீட்டில் ஆர்கஸ் அணிக்கு சேகான் ஜெயசூர்யா 16, சுபம் ரஞ்சனே 29, டுவைன் பிரிட்டோரியஸ் 21 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் சீட்டில் ஆர்கஸ் சேர்த்தது. இந்தப் போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நான்கு ஓவர்களுக்கு 33 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஸ்டீபன் டைலர் ரன் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் சயான் ஜஹாங்கீர் பத்து ரன்களில் வெளியேறினார்.

ஆனால் மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தனி ஒரு ஆளாக நின்று சூறாவளியாக சுழன்று அடித்து, வீட்டில் ஆர்கஸ் அணியின் சாம்பியன் கனவை ஒட்டுமொத்தமாக கலைத்து விட்டார்.

இறுதிவரை களத்தில் நின்ற நிக்கோலஸ் பூரன் 55 பந்துகளில் பத்து பவுண்டரி மற்றும் 13 சிக்ஸர்கள் உடன் 137 ரன்கள் குவித்து, அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசனின் சாம்பியனாக மும்பை அணியை உயர்த்தினார். இவருடன் சேர்ந்து டிவால்ட் பிரிவியஸ் 20 மற்றும் டிம் டேவிட் 10 ரன்கள் எடுத்தார்கள்.

சிஎஸ்கே அணிக்காக விளையாடும் பிரக்டோரியஸ் இந்த ஆட்டத்தில் மூன்று ஓவர்கள் பந்து வீசி 47 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த போட்டியை நிக்கோலஸ் பூரன் 16 வது ஓவரில் முடித்துவிட்டார் என்பது தான் குறிப்பிடத்தக்கது.