முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நஷ்டம் – 12 லட்சம் அபராதம் விதித்துள்ள பிசிசிஐ

0
102
Rohit Sharma Mumbai Indians

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் பகல் இரவு போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 48 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 2 சிக்சர் உட்பட 81* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் விளையாடிய டெல்லி அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் இறுதியில் லலித் யாதவ் மற்றும் அக்ஷர் பட்டேலின் அதிரடியான ஆட்டம் காரணமாக 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 13.2 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 104 ரன்கள் மட்டுமே அந்த அணி குவித்திருந்தது.

- Advertisement -

பின்னர் லலித் யாதவ் மற்றும் அக்ஷர் பட்டேல் இருவரும் டெல்லி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். லலித் யாதவ் 38 பந்துகளில் 47 ரன்களுடனும், அக்ஷர் பட்டேல் 17 பந்துகளில் 37 ரன்களுடன் இறுதி வரை இவர்கள் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஒரு சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை பிசிசிஐ முன்பு அறிவித்திருந்தது. ஒரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இன்னிங்சை முடித்தாக வேண்டும். குறிப்பாக பந்துவீசும் அணி ஒரு மணி நேரத்துக்குள் குறைந்தபட்சம் 14.11 ஓவர்கள் வீசி இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி 20 ஓவர் அதாவது ஒரு இன்னிங்சை சரியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்தாக வேண்டும்.

ஆனால் நேற்றைய போட்டியில் கேப்டன் ரோஹித் தலைமையில் விளையாடிய மும்பை அணி தாமதமாக பந்துவீசி அதிக நேரம் எடுத்துக் கொண்டது. நேற்று மும்பை அணி ஒரு இன்னிங்சை முடிக்க அதிகநேரம் எடுத்துக் கொண்டதால், கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு 12 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அபராதம் மட்டுமின்றி இது முதல் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுபோல ஐசிசி நிபந்தனை மற்றும் விதிமுறையை மீறி தவறு செய்யும் பட்சத்தில் அபராதம் மற்றும் தண்டரை இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.