ஐபிஎல் விட்டு விலகினார் ஜோப்ரா ஆர்ச்சர்; விலகிய அடுத்த நிமிடமே மாற்று வீரரை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்!

0
24337

உடல்தகுதி குறைபாடு மற்றும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரை விட்டு விலகியுள்ளார் ஜோப்ரா ஆர்ச்சர். இவர் விலகிய அடுத்த நிமிடமே மாற்று வீரரையும் அறிவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் 8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் காயம் காரணமாக ஆர்ச்சர் விளையாடவில்லை.

- Advertisement -

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னர் ஆர்ச்சர் முழுமையாக உடல்நிலை குணமடைந்து தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரிலும் விளையாடினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் நம்பிக்கை ஏற்பட்டது.

பும்ரா இல்லாத சூழலில் ஜோப்ரா ஆர்ச்சர் அணியின் பந்துவீச்சை வழிநடத்துவார் என்றும் கருத்துக்கள் நிலவியது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ஆர்ச்சர் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

அதன்பிறகு பயிற்சியின்போது மீண்டும் காயம் ஏற்பட்டதால் 5-6 போட்டிகள் விளையாடலாம் வெளியில் அமர்ந்திருந்தார். கடந்த இரண்டு லீக் போட்டிகளில் விளையாட வைக்கப்பட்டார். அதிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து மோசமாக செயல்பட்டார்.

- Advertisement -

இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி, படுமோசமான 60+ ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.

கடந்த வாரமே காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் விட்டு வெளியேறிவிட்டார் என்ற வதந்திகள் வெளிவந்தது. அது உண்மை இல்லை என்று அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இப்போது ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கும் முன்பு, ஆர்ச்சர் ஐபிஎல் தொடரை விலகிவிட்டார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அத்துடன் கடந்த வாரம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிரிஸ் ஜோர்டன், ஜோப்ரா ஆர்ச்சர்-க்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கிரிஸ் ஜோடன் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 87 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் 28 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஆரம்பவிலையான 2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீதமுள்ள ஐபிஎல் தொடருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.