அனுபவம் வாய்ந்த இந்த வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு வெளியேற்றி விடும் – ஆகாஷ் சோப்ரா உறுதி

0
58

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் பொல்லார்ட் 11 போட்டிகளில் விளையாடி 144 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 14.40 ஆக மட்டுமே இருந்தது. நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அந்த அணியின் பெர்ஃபார்மன்ஸ் மிக சுமாராக இருந்துள்ளது.இந்நிலையில் தற்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பொல்லார்டு குறித்து ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.

அடுத்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தக்க வைக்க வாய்ப்பு இல்லை

நடப்பு சீசனில் லீக் தொடரில் பொல்லார்டு மிக மிக சுமாராகவே விளையாடினார். ஆறு கோடி ரூபாய்க்கு அவரை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்தது. அவரை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் தக்க வைக்க வாய்ப்பு மிகக் குறைவு என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர் முருகன் அஸ்வினை (ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் ) வெளியிடவும் வாய்ப்பு உள்ளது. உனத்கட் குறித்து என்ன முடிவு எடுப்பார்கள் என்று தெரியவில்லை ஆனால் டிமால் மில்ஸ் (ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் ) நிச்சயமாக அடுத்த ஆண்டு தக்க வைக்க வாய்ப்பு இல்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் வீரர்கள் இல்லை

இளம் வீரர்களான திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் மிக அதிரடியாக நடப்பு சீசனில் விளையாடினர். இவர்கள் இருவரும் வருங்கால மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களாக வலம் வருவார்கள். இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்வார்கள். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் நல்ல ஆல்ரவுண்டர் வீரர்கள் இல்லை.

பேட்ஸ்மேன்கள் பௌலிங் செய்வதில்லை அதேபோல பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்வது இல்லை. அந்த விஷயத்தில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி சற்று பலவீனமாக தெரிகிறது. முன்பு அந்த அணியில் ஹர்திக் பாண்டியா குருனால் பாண்டியா மற்றும் பொல்லார்டு அந்த இடத்தில் சிறப்பாக விளையாடினார்கள். தற்பொழுது அந்த இடம் காலியாக இருப்பதனால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி சற்று பலம் குறைந்து காணப்படுகிறது என்றும் கூறியுள்ளார்