எனக்கும் ஏபிடி-க்கும் இருக்க ரிலேஷன்ஷிப் இதுதான் – பேபி ஏபிடி பேட்டி!

0
91

ஏபி டி வில்லியர்ஸ் உடன் தனக்கு இருக்கும் நெருக்கம் பற்றி பகிர்ந்துள்ளார் டெவால் பிரேவிஸ்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் டெவால் பிரேவிஸ், சவுத் ஆப்பிரிக்கா டி20 லீகில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியிருக்கும் எம்ஐ கேப்டவுன் அணிக்காக விளையாடி வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீகில், நேற்றைய ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் இரு அணிகளும் மோதிக்கொண்டன.

காயம் காரணமாக நீண்ட காலம் விளையாடாமல் இருந்த ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். அவரும் எம்ஐ கேப்டவுன் அணிக்காக விளையாடி வருகிறார். பந்துவீச்சில் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

பேட்டிங்கில் டெவால் பிரேவிஸ் 41 பந்துகளில் 70 ரன்கள் விலாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால் ஆட்டநாயகன் ஆகவும் தேர்வு செய்யப்பட்டார்.

பிரேவிஸ் பேட்டிங் செய்யும்பொழுது ஏபி டி வில்லியர்ஸ் போன்று இருக்கிறது என்பதால் அவருக்கு “பேபி ஏபிடி” என்கிற இன்னொரு செல்ல பெயரும் உண்டு.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட பிறகு டி வில்லியர்ஸ் குறித்து பேசிய டெவால் பிரேவிஸ் கூறியதாவது,

“என்னுடைய வளர்ச்சிக்கு டி வில்லியர்ஸ் முக்கிய பங்காற்றி வருகிறார். எனக்கும் டி வில்லியர்ஸ்-க்கும் இருக்கும் உறவு மிகவும் ஸ்பெஷல் ஆனது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய ரோல் அவருக்கு உண்டு. எந்த நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் அவருக்கு தான் போன் செய்து கேட்பேன். அவரும் எனக்கு சரியான நேரங்களில் பல உதவிகளை செய்திருக்கிறார். சரியான நேரங்களில் முக்கியமான அறிவுரைகளையும் கூறி வருகிறார். சர்வதேச போட்டிகளை கையாள்வதற்கு அவர் தான் உதவுகிறார்.” என பகிர்ந்துள்ளார்.