பார்ட்டியில் ஹர்திக் பண்டியாவும் சேர்ந்து, தல தோனி போட்ட செம்ம டான்ஸ் – வீடியோ!

0
134

பார்ட்டியில் ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து தோனி ஆடிய டான்ஸ் வீடியோ சமூகத்தில் வலைதளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பெரிதளவில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை.

- Advertisement -

தொடர்ச்சியாக வெவ்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறார். கால்பந்து, பேட்மின்டன் ஆகியவற்றை விளையாடி வருவதை பல புகைப்படங்களில் நாம் கண்டுள்ளோம்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தொடர்ச்சியாக பயணித்து வரும் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் சிறுவர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கு பயிற்சிகளையும் அவ்வபோது கொடுத்து வருவதாக தகவல்கள் வந்திருக்கிறது.

அதற்கு அடுத்ததாக புதிதாக துவங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அகடமியின் கிளையில் தோனி தனது பயிற்சியை செய்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இவரை மற்ற வீரர்கள் போல ஆங்காங்கே பார்ட்டியில் பார்ப்பது அரிது. அப்படியே பார்ட்டியில் கலந்து கொள்வதை பார்த்தாலும் அதை மிகவும் இயல்பாக சிரித்தபடி கொண்டாடிவிட்டு நகர்ந்து விடுவார். இப்படிப்பட்ட தோனியை தான் நாம் இதுவரை கண்டு வந்தோம்.

ஆனால் சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், க்ருனால் பாண்டியா ஆகியோருடன் சேர்ந்து மகேந்திர சிங் தோனி ஆடிய டான்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நமது தோனியா இது? இப்படி எல்லாம் பார்ட்டியை கொண்டாடுவாரா? என பலரும் ஆச்சரியத்துடன் அந்த வீடியோவை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.