2வது டி20ஐ போட்டிக்குப் பின் இங்கிலாந்தில் இந்திய அணி வீரர்களை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்த தோனி !

0
310
MS Dhoni meets Indian team

தற்போது இந்திய அணி இங்கிலாந்திற்கு ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாட சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் ஒரு டெஸ்ட் போட்டியில் கோவிட் தொற்றால் கேப்டன் ரோகித் சர்மா விளையாட முடியாமல் போக, ஜஸ்ப்ரீட் பும்ரா தலைமையில் விளையாடி வரலாற்றுத் தோல்வியை இந்திய அணி சந்தித்தது.

கடந்த ஏழாம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி செளதாம்டனில் நடக்க ஹர்திக் பாண்ட்யாவின் அரைசதத்தோடு 198 ரன்கள் குவித்த இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

நேற்று தொடரின் இரண்டாவது போட்டி பர்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கு இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னோய் போன்ற வீரர்கள் நீக்கப்பட்டு, விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஜஸ்ப்ரீட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஷ் ஐயர் இடம் பெற்றனர். மேலும் போட்டிக்கான இந்திய ஆடும் அணியில் தீபக் ஹூடா, இஷான் கிஷான், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டார்கள். இதற்குப் பதிலாக விராட் கோலி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீட் பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்தப் போட்டிக்கான டாஸில் முதலில் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி இருபது ஓவர்களின் முடிவில் 170 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களே எடுத்தது. இதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. மூன்று ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுத்தந்து ஒரு மெய்டனோடு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தற்போது இங்கிலாந்தில் உலகப் பிரபலமான விம்பிள்டன் கிரான்ட்சலாம் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதைக் கண்டு களிப்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இங்கிலாந்திற்குச் சென்றுள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்தில் இருக்கும் மகேந்திர சிங் தோனி, இந்திய அணி இரண்டாவது டி20 ஆட்டத்தில் வென்ற பிறகு, அணி வீரர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் புகைப்படைங்களை, பி.சி.சி.ஐ-யின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் மகேந்திர சிங் தோனி இஷான் கிஷானோடும், ரிஷாப் பண்ட்டோடும் இருக்கின்ற புகைப்படங்கள் காணப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைத்தள பக்கத்தில் “இள இரத்தங்ளோடு எப்போதும் தோனி” என்று இந்தப் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது!