தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக கால் பதிப்பு ; முதல் படத்திற்கே நடிகர் விஜய்யை அழைத்துள்ள தோனி – அதற்கு விஜய் அளித்துள்ள பதில் இதுதான்

0
2566
MS Dhoni and Actor Vijay

இந்திய கிரிக்கெட்டில் கவாஸ்கர், கபில்தேவ் காலம் தாண்டி, மிகப்பெரிய அளவில் முத்திரை பதித்திருக்கும் ஒரு பெயர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான். அவருக்கு அடுத்து எத்தனை பெரிய வீரர்கள் வந்தாலும், அவர் இந்திய சமுதாயத்தில் கடைக்கோடி கிராமம் வரை சென்றடைந்ததுபோல், வேறும் யாரும் ஊடுருவவில்லை.

ஆனால் இந்த நிலை 2007 முதல் இருபது ஓவர் உலகக்கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி வெல்லும் வரைதான். இந்திய சமுதாயத்தில் கடைக்கோடி கிராமங்களிலிருந்து, குழந்தைகள் வரை மகேந்திர சிங் தோனி சென்றடைய ஆரம்பித்தார்.

பின்பு 2011ல் ஐம்பது ஓவர் உலகக்கோப்பை அவர் தலைமையில் கைப்பற்றியதோடு, இறுதி ஆட்டத்தில் நின்று ஆடி அணியை அவர் வெல்ல வைத்தது, அவரை வேறொரு மிகப்பெரிய உயரத்தில் வைத்தது. இதற்குப் பிறகு அணி ஒட்டுமொத்தமாகத் தோற்கும் பொழுது, அவர் தனியே நின்று அசத்திய ஆட்டங்கள் மூலமாக, அவரின் புகழ் தடுக்க முடியாத அளவில் பரவியது.

இதற்கு நடுவில் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காகத் தலைமையேற்று, அணியை வெற்றிக்கரமாக அவர் வழிநடத்திய விதம், உலக கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழகத்தில் மகேந்திர சிங் தோனியின் பெயர், தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு இணையான செல்வாக்கு பெற்ற பெயராக, கோடிக்கணக்கான இரசிகர்களோடு விளங்குகிறது.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளது. மேலும் இதுக்குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நடப்பு ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் வெளிவரும் என்று நம்பபடுகிறது. மேலும் மகேந்திர சிங் தோனியின் முதல் தமிழ்ப்பட தயாரிப்பில் நடிகர் விஜய் இணைய இருந்ததாகவும், ஆனால் கால்ஷீட் பிரச்சினை இருந்ததால் முடியாமல் போய்விட்டதாகவும், ஆனால் எதிர்காலத்தில் இணைவார்கள் என்றும் சொல்லப்படுகிறது!