சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ள தோனி

0
63
Suresh Raina and MS Dhoni

நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த முடிந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 59 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் அமைச்சர் உட்பட 87* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய சென்னை அணி யால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 39 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்சருடன் 78 ரன்கள் குவித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் மிகச் சிறப்பாக பந்து வீசிய காகிசோ ரபாடா மற்றும் ரிஷி தவான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை உடைத்த மகேந்திரசிங் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அனைத்துவித டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். 219 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருந்த அவரை நேற்று மகேந்திர சிங் தோனி பின்னுக்குத் தள்ளினார்.

- Advertisement -

நேற்றைய ஆட்டத்தில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம் தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி 220 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அனைத்துவித டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்கிற பெருமைக்குரிய சாதனையை தற்பொழுது மகேந்திர சிங் தோனி தட்டிச்சென்றுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள்

220 – மகேந்திர சிங் தோனி

219 – சுரேஷ் ரெய்னா

93 – ஃபேப் டு பிளேசிஸ்