கேஎல் ராகுல் திருமண பரிசாக 2.7 கோடிக்கு கிஃப்ட் கொடுத்த விராட் கோலி; தோனி கொடுத்த பரிசின் விலை தெரியுமா?

0
1263

கேஎல் ராகுலின் திருமணத்திற்கு கோடிகளில் பரிசுகள் குவிந்துள்ளன. விராட் கோலி, தோனி இருவரும் கொடுத்த பரிசுகளின் விலை பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டிக்கும், முன்னணி கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலுக்கும் கடந்த ஜனவரி 23ம் தேதி திருமணம் நடைபெற்றது. நெருங்கிய வட்டாரத்திற்குள் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு வெகுசில வீரர்கள், நடிகர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்திய அணிக்குள் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட பலரும் இந்தியா-நியூசிலாந்து தொடரில் விளையாடி வருவதால் இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் இருவரும் இணைந்து 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான திருமண பரிசை கொடுத்திருக்கின்றனர். இதில் நெருங்கிய நண்பர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் சேர்ந்து பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சமீபத்திய கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கின்றனர். இதன் மதிப்பு 2.7 ஏழு கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மகேந்திர சிங் தோனி சுமார் 80 லட்சம் ரூபாய்(எக்ஸ் ஷோரூம் விலை) மதிப்பிலான கவாஸ்கி நிஞ்சா பைக் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.

விராட் கோலி இவர்களது திருமணத்தின்போது நியூசிலாந்து ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் மகேந்திர சிங் தோனி இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை துவங்கி விட்டார் என்று பல்வேறு வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின. ஆகையால் முன்னாள் கேப்டன்கள் இருவரும் திருமணத்தில் பங்கேற்கவில்லை.

மற்ற நெருங்கிய நண்பர்களான சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இவர்களும் இந்திய அணியில் விளையாடி வருவதால் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை.

ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பரிசை கேஎல் ராகுலுக்கு கொடுத்திருக்கிறார் என்ன தெரிய வந்திருக்கிறது. என்ன பரிசு என்கிற விவரங்கள் சரிவர தெரியவில்லை.

கே எல் ராகுலுக்கு கோடிகளில் பல பரிசுகள் குவிந்த வண்ணம் இருக்க, மறுபுறம் சுனில் செட்டி மகள் அதியா செட்டிக்கும் பாலிவுட் நடிகர்கள் சார்பில் இருந்து பல பரிசுகள் வந்திருக்கின்றன.

குறிப்பிடத்தக்க விதமாக, சல்மான் கான் 1.6 கோடி ரூபாய் மதிப்பில் ஆடி கார் ஒன்றினை பரிசாக கொடுத்திருக்கிறார். அர்ஜுன் கபூர் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பிரேஸ்லெட் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். சுனில் ஷெட்டின் நெருங்கிய நண்பர் ஜாக்கி ஷெராப் 35 லட்சம் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.

இந்த தம்பதிக்கு சுனில் செட்டி மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து மும்பையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான அப்பார்ட்மெண்ட் ஒன்றினை திருமண பரிசாக கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.