சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைந்ததும்; தோனி தன்னுடைய பழைய இடத்தில் வந்து விளையாட வேண்டும் – கௌதம் கம்பீர் விருப்பம்

0
785
MS Dhoni and Gautham Gambhir

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று இரவு நடந்த முடிந்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய டுவைன் பிராவோ ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி 5 ஆட்டங்களில் 40 ரன்கள் மட்டுமே அடித்து ஃபார்ம் அவுட்டில் இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில், 2 பவுண்டரிகள் உட்பட 9 பந்துகளில் 11 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணி தகுதி அடைந்ததும் தோனி இதைச் செய்தாக வேண்டும்

நேற்றைய வெற்றி மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பெறும் 7-வது வெற்றி இதுவாகும். 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைந்துவிடும். அப்படி சென்னை அணி தகுதி அடைந்த மாத்திரத்தில், மகேந்திர சிங் தோனி எஞ்சியுள்ள ஆட்டங்களில் சற்று முன் வரிசையில் அதாவது நான்காவது இடத்தில் வந்து விளையாட வேண்டும் என்று கௌதம் கம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில காலமாகவே நல்ல டச்சில் இல்லாத மகேந்திர சிங் தோனி இந்த ஆட்டங்களில் சற்று முன் வரிசையில் வந்து அவருடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும். மீண்டும் அவர் தன்னுடைய பழைய ஃபார்மிற்க்கு வர இது சற்று உதவியாக இருக்கும். அவர் பழையபடி அதிரடியாக விளையாட தொடங்கினால் சென்னை அணியின் பேட்டிங் இன்னும் பலப்படும், வெற்றியும் மிக சுலபமாக சென்னை அணிக்கு கிட்டும் என்று கெளதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எம் எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா குறித்து பேசியுள்ளார் சபா கரிம் மற்றும் இர்பான் பதான்

மகேந்திர சிங் தோனி சுரேஷ் ரெய்னாவை எப்பொழுதும் கைவிட மாட்டார். நல்ல ஃபார்மில் இல்லாமல் போனாலும் கூட எப்பொழுதும் சுரேஷ் ரெய்னா மீது மிகுந்த நம்பிக்கையை மகேந்திர சிங் தோனி வைத்திருப்பார். அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு சுரேஷ் ரெய்னாவும் நடந்து கொள்வார் என்று சபா கரிம் கூறியுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது என்று மற்றொரு பக்கம் இர்பான் பதான் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ருத்ராஜ், ஃபேப் டு பிளசிஸ், அம்பத்தி ராயுடு மற்றும் மொயின் அலி
மிக அருமையாக விளையாடினார்கள். குறிப்பாக இவர்களுக்கு பின் வந்த விளையாடிய தோனி – ரெய்னா ஜோடி பழைய நினைவுகளை கண்முன் கொண்டு வந்ததனர். இவர்கள் இருவரும் இதே போல அதிரடியாக இனி வரும் போட்டிகளில் விளையாடினால் சென்னை அணியை எந்த அணியாலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.