நேற்றைய போட்டியில் ஐந்தாவது வீரராக ரெய்னா களமிறங்கியது ஏன் ? – தோனி விளக்கம்

0
123
Suresh Raina and MS Dhoni

நேற்றிரவு ஷார்ஜா மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே குவித்தது. பொதுவாக ஷார்ஜா மைதானத்தில் மிக எளிதாக 200 ரன்கள் வரும் பட்சத்தில் நேற்று பெங்களூர் அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, ஆர்சிபி ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

விராட் கோலி மற்றும் படிக்கல் ஜோடி மிக அற்புதமாக முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்ட முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் அனைவரும் மிக நிதானமாக விளையாடிய காரணத்தினால், இறுதியில் 11 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

ஐந்தாவது இடத்தில் களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா காரணம் இதுதான்

நேற்று சென்னை அணி பெங்களூர் அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தபோது, மூன்றாவது இடத்தில் மொயின் அலி வந்து விளையாடினார். அதன் பின்னர் நான்காவது இடத்தில் அம்பத்தி ராயுடு வந்து விளையாடினார். பொதுவாக சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் வந்து விளையாடும் நிலையில் நேற்று அவர் இந்த இரண்டு இடங்களிலும் விளையாட வைக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை போட்டி முடிந்ததும் மகேந்திர சிங் தோனி விவரித்து கூறினார்.

நேற்றைய போட்டியில் லெஃப்ட் – ரைட் காம்பினேஷனை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தோம்.எங்களது அணியில் நிறைய இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். லெஃப்ட் – ரைட் காம்பினேஷன் படியே நேற்று வீரர்களை களம் இறக்கினோம். எங்களது அணியின் பேட்டிங் லைன் மிக அற்புதமாக உள்ளது.

குறிப்பாக இடதுகை பேட்ஸ்மேன்கள் ( மொயின் அலி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவிந்திர ஜடேஜா ) அனைவரையும் எந்த இடத்தில் இறங்கினாலும் அந்த இடத்தில் தங்களுடைய பணியை மிக நேர்த்தியாக செய்ய கூடிய திறமை படைத்தவர்கள். இதனடிப்படையிலேயே நேற்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா சற்றுக் கீழே இறங்கி விளையாட வைத்தோம் என்று தோனி விளக்கம் அளித்தார்.

நேற்றைய வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் சென்னை அணி உள்ளது. சென்னை அணி நாளை மதியம் நடைபெற இருக்கும் ஆட்டத்தில், அடுத்தடுத்து அதிரடி வெற்றிகளை குவித்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அபுதாபியில் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.