ஐபிஎல் 2022: விராட் கோலி & ரோஹித் ஷர்மா மட்டுமே செய்திருந்த சாதனைப் பட்டியலில் இணைந்துள்ள தோனி

0
68
Virat Kohli MS Dhoni and Rohit Sharma

இன்றைய ஐ.பி.எல்-ன் ஏழாவது ஆட்டம் மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் சென்னை லக்னோ அணிகளுக்கு இடையே தற்போது நடந்து வருகிறது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் சென்னையை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதன்படி சென்னைக்குத் துவக்கம் தர களமிறங்கிய ருதுராஜ் மீண்டும் ஏமாற்ற ஆனால் அனுபவ வீரர் உத்தப்பா தனது அற்புதமான ஆட்டத்தால், மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்து 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

உத்தப்பா தந்த வலிமையான அடித்தளத்தைப் பயன்படுத்திக்கொண்ட மொயீன் அலியும், சிவம் துபேவும் உத்தப்பா விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்கள். முதல் ஆட்டத்தைத் தவறவிட்ட மொயீன் அலி இந்த ஆட்டத்தில் 22 பந்துகளில் 35 ரன்களும், சென்னை அணிக்குப் புதிதாக வந்துள்ள சிவம் துபே 30 பந்துகளில் 49 ரன்களும் குவித்தார்.

பின்பு இறுதிக்கட்டத்தில் அம்பதி சுமாரான பங்களிப்பு தர, புதிய கேப்டன் ஜடேஜா உடன் இணைந்தார் தோனி. தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் அடித்து, அவரது இரசிகர்களை சிலிர்க்க விட்டவர் அடுத்த பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் ஒரு பவுண்டரியும் என 16 ரன்களை 6 பந்துகளில் அதிரடியாய் அடித்தார். முடிவில் சென்னை அணி 210 ரன்களை 7 விக்கெட் இழப்புக்கு குவித்தது.

இந்த ஆட்டத்தின் மூலம் மகேந்திர சிங் தோனி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ஒட்டுமொத்த 20/20 போட்டிகளில் 7000 ரன்களை கடந்தார். உலகளவில் 20/20 போட்டிகளில் 7000 ரன்களை கடந்த 18வது வீரராகவும், இந்திய அளவில் 6வது வீரராகவும் இணைந்தார் மகேந்திர சிங் தோனி!

- Advertisement -