கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டுவைன் பிராவோ ஆடாததற்கு இது தான் காரணம் – கேப்டன் தோனி விளக்கம்

0
487
MS Dhoni and Dwayne Bravo

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி அபுதாபி மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து விடும் சென்னை அணி. ஆனால் இந்த ஆட்டத்தை ரசிகர்களை நோக்கி காத்திருந்தனர். டாஸ் வென்ற கேப்டன் மார்கன் பேட்டிங் தேர்வு செய்தார். டாஸ் நேரத்தில் பேசிய கேப்டன் தோனி இந்த ஆட்டத்தில் டுவைன் பிராவோ ஆடவில்லை என்று கூறினார்.

கடந்த இரண்டு கூட்டங்களிலும் 3 விக்கெட்டுகளை எடுத்து சென்னை அணியின் வெற்றி வாய்ப்பை அதிகம் ஆக்கியவர் பிராவோ. மும்பை அணிக்கு எதிராக பேட்டிங்கிலும் சாதித்துக் காட்டினார். அவருடைய பந்துவீச்சை இறுதி கட்ட ஓவர்களில் அடிக்கவே மற்ற வீரர்கள் திணறும்போது ஏன் இன் பிராவை அணிந்து எடுக்காதது ஏன் என்று பல ரசிகர்கள் குழம்பினர். இது பற்றி பேசும் போது இதற்கான விடையை கூறினார்.

தோனி பேசும்போது ஏற்கனவே கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் ஆடும் பொழுது அவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து வரிசையாக இரண்டு ஆட்டங்களில் விளையாடி விட்டதால் காயத்தின் வீரியத்தை மீண்டும் அதிகமாக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். பிராவோவிற்கு பதிலாக இந்தியாவில் நடந்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் குர்ரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு பேசிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் டூப்ளெஸிஸ் இந்த மைதானம் எனக்கு மறக்க முடியாத மைதானம் என்று கூறினார். ஏனென்றால் இந்த படத்தில் கடைசியாக ஆடும் பொழுது தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் தனது தலையில் அடிபட்டு சில காலங்கள் விளையாட முடியாமல் இருந்ததாக கூறினார். அப்போது ஏற்பட்ட காயத்தினால் இன்னமும் கழுத்துப் பகுதியில் சில நேரங்களில் வழி ஏற்படுவதாகவும் கூறினார் டூப்ளஸிஸ்.

கடந்த முறை இங்கு விளையாடும் போது சிறப்பாக விளையாட முடியவில்லை என்றும் எங்கு எங்கெல்லாம் தவறுகள் இருந்ததோ அதை எல்லாம் சரி செய்து தற்போது சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவர் கூறினார். மிடில் ஆர்டரில் ராயுடு மற்றும் மொயின் இணைந்து சிறப்பாக விளையாடுவதாகவும் அவர் கூறினார். முதல் குறையாக இந்தமுறை பகலில் ஆட்டம் நடைபெறுவதால் சற்று
வெப்பம் அதிகமாக இருப்பதாகவும் ஆனால் இதற்கும் சென்னையில் தயாராகத் தான் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.