ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து தன் கருத்ததைப் பதிவு செய்துள்ள தோனி

0
119
MS Dhoni about Jadeja leaving CSK Captaincy

இந்த ஐ.பி.எல் தொடருக்குப் பார்வையாளர்கள் குறைந்திருந்தாலும், திருப்பங்களுக்கும், விறுவிறுப்பிற்கும், புதிய இளம் கிரிக்கெட் திறமைகள் வெளிப்படுவதற்கும், இழந்தை பேட்டிங், பவுலிங்கை பார்மை சில வீரர்கள் மீட்டு எழுந்து வருவதற்குமென, எந்தப் பஞ்சமும் இல்லாமல் விறுவிறுவென்று பயணித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த ஐ.பி.எல் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்பு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிக்கொள்ள, ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக வந்தார். ஆனால் முக்கிய வீரர்களின் காயத்தால் சென்னை அணி தொடர் தோல்விகளைச் சந்திக்க, ஜடேஜா இரண்டு நாட்களுக்கு முன்பு கேப்டன் பதவியிலிருந்து விலகி, தோனியே மீண்டும் கேப்டனாக வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி ருதுராஜ்-கான்வோ கூட்டணியின் அபார பேட்டிங்கால் அசத்தல் வெற்றியைப் பெற்றது. வழக்கம்போல் பீல்டிங் சொதப்பலாக இருந்தாலும், பந்துவீச்சில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளதால் வெற்றி வசமாகி இருந்தது.

நேற்றைய போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஜடேஜா கேப்டன் விலகல் குறித்து பேசினார். அதில் “கடந்த ஆண்டே கேப்டன் பொறுப்பிற்கு தான் வரவேண்டுமென்று ஜடேஜாவிற்கு தெரியும். கேப்டன் பொறுப்பை ஏற்கும்பொழுதே பல நிர்பந்தங்களும் உருவாகி விடும். முதலிரண்டு போட்டிகளில் நான் அவரது கேப்டன்சியை மேற்பார்வையிட்டதோடு, அடுத்தடுத்த போட்டிகளில் அவரையே எல்லாம் செய்யவிட்டேன். வருகின்ற எதுவொன்றுக்குமே அவரையே பொறுப்பேற்க சொல்லியிருந்தன். கேப்டன்சி என்பது கரண்டியால் ஊட்டப்படுவது அல்ல. ஜடேஜாவால் கேப்டன்சியின் அழுத்தங்களைத் தாங்க முடியவில்லை. அது அவரது இயல்பான பேட்டிங், பவுலிங், பீல்டிங் திறமைகளையும் பாதித்துவிட்டது. அதனால் அவர் விலகிக்கொண்டார்” என்று கூறியிருக்கிறார்!