தோனி கடைசி வரை இந்த விஷயத்தை அஸ்வினை பண்ண விடவே இல்லை – சேவாக் கூறிய விசயம்

0
557
Ravichandran Ashwin and MS Dhoni

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்ததால் டெல்லி அணி எளிதான இலக்கை எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் இரண்டு வேகப்பந்து வீச்சாளரான நோக்கியா மற்றும் ரபாடா என இருவரும் சிறப்பாக பந்துவீசி அசத்தினர். டெல்லி அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 2.5 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 22 ரன்கள் விட்டுக் கொடுத்தார். T-20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தேர்வான பின்பு அஸ்வின் விளையாடும் முதல் டி20 போட்டி இதுவாகும்.

அஸ்வின் ரன்களை பெருவாரியாக விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக பந்து வீசினார் என்று பலரும் கூறினாலும் முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரர் வீரேந்திர சேவாக் அஸ்வின் ஒரு தவறு செய்து வருவதாக கூறினார். இது குறித்து அவர் பேசும்போது அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக வித்தியாசமான பந்துவீசும் முறையை பயன்படுத்துகிறார் என்று கூறினார். இதனால்தான் தற்போது அவரால் ரங்கிளி கட்டுப்படுத்த முடிகிறதே தவிர பெரிதாக விக்கெட்டுகள் எதுவும் எடுக்க முடியவில்லை என்று கூறினார். சேவாக் கூறியது போலவே நேற்றைய ஆட்டத்தில் பந்துவீசும் போது அஸ்வின் அதிகமாக கேரம் பால் என்று சொல்லப்படும் வித்தியாசமான பந்துவீசும் முறையை கையாண்டார்.

- Advertisement -

மேலும் சேவாக் பேசும் பொழுது ரன்களை அதிகமாக வழங்கி விடுவோமோ என்ற எண்ணம் தான் இப்படி அதிகமான வேரியேஷன்களை பயன்படுத்த அவரை தூண்டுகிறது என்று கூறினார். இதனால் தான் பொதுவாக வீசப்படும் ஆஃப் ஸ்பின் பந்துகளை வீச பயப்படுகிறார் என கூறினார். ஆப் ஸ்பின் மூலமாகத்தான் விக்கெட் எடுக்க முடியும் என்றும் ரன்கள் அதிகமாக போனாலும் பரவாயில்லை என்று விக்கெட் எடுக்கும் பந்துகளை வீச வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இது போன்று வித்தியாசமாக பந்துவீசும் முறைகளை ஆட்டத்தின்போது பயன்படுத்த ஒருநாளும் தோனி அனுமதிக்க மாட்டார் என்றும் சேவாக் கூறியுள்ளார். மேலும் இதே விஷயம் குறித்து முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா பேசும்போது அஷ்வின் ரன்களை வாரி கிடைக்காவிட்டாலும் ஒரு சீனியர் பந்துவீச்சாளராக அவர் நிச்சயம் தேவையான விக்கெட்டுகளை எடுத்து தர வேண்டும் என்று கூறினார்.

டி20 உலகக் கோப்பைக்கு பிரதான சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அஸ்வின் வரும் போட்டிகளில் எப்படி தன்னை மேம்படுத்திக் கொள்ள போகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

- Advertisement -