டெத் ஓவர்களில் அதிக எழுத்தத்தைச் சந்திப்பது பேட்ஸ்மேனா ? பவுலரா ? கேப்டன் தோனி அளித்த விளக்கத்தை பகிர்ந்துக் கொண்ட பிரிட்டோரியஸ்

0
51
Dwaine Pretorious and MS Dhoni

தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா வந்திருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வருகின்ற வியாழக்கிழமை, இரவு ஏழு மணிக்கு நடக்க இருக்கிறது.

இதற்கான தென்ஆப்பிரிக்க அணியில் ஆல்ரவுண்டர் டிவைன் ப்ரட்டோரியஸ் இடம்பெற்று இருக்கிறார். இவரை இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி 50 இலட்சத்திற்கு வாங்கி இருந்தது. ஆறு ஆட்டங்களில் ஆட வாய்ப்பு பெற்ற இவரின் பவுலிங் பேட்டிங் பங்களிப்பு நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியுடன் 156 ரன்களை சென்னை அணி சேஸ் செய்ய, இறுதிவரை களத்தில் நின்று மகேந்திர சிங் தோனி வென்று கொடுத்தார். இந்த முக்கியமான ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியுடன் நின்று 14 பந்துகளில் 22 ரன் அடித்திருந்தார் டிவைன் ப்ரட்டோரியஸ்.

இந்த ஆட்டத்தை மகேந்திர சிங் தோனி வெற்றிக்கரமாக முடித்த பிறகு, டிவைன் ப்ரட்டோரியஸ் தோனியிடம் ரேம்ப் ஷாட் ஆட அனுமதி கேட்டது, அதற்கு அவர் எப்பொழுது அந்த ஷாட்டை ஆட எப்பொழுது அனுமதித்தார் என்பதைப் பற்றியெல்லாம் சிலாகித்துக் கூறியிருந்தார்.

தற்பொழுது மீண்டும் தோனி குறித்துப் பேசியுள்ள டிவைன் ப்ரட்டோரியஸ் “பவுலராக கடைசி மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் தாராமலும், பேட்டராக மூன்று சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இது புத்துணர்வான புது மனநிலை. மகேந்திர சிங் தோனி களத்தில் பரபரப்பாக இல்லை, அவர் தன்னை யாரையும் விட கீழே நினைப்பதில்லை. எதுவும் முடியும் என்ற நம்பிக்கையோடு இருப்பார். அவரை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் மிகவும் நம்பிக்கையானவர். தன்னால் எதையும் செய்ய முடியுமென்று அவர் உறுதியாய் நம்புகிறார்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விசயம் கிரீஸில் அமைதியாக இருப்பதைத்தான். மேலும் அவர் பந்துவீச்சாளர் மீது அழுத்தத்தை உண்டாக்குவதும். இறுதிக்கட்ட ஓவர்களில் பேட்டர்கள் அழுத்ததில் இருக்க வேண்டியதில்லை, பவுலர்கள்தான் அழுத்தத்தில் இருப்பார்கள் என்று எனக்குப் புரிய வைத்தார்” என்றும் கூறினார்!