மொயின் அலியை வாங்குவதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும் தோனி தான் காரணம் – சி.எஸ்.கே நிர்வாகம் விளக்கம்

0
376
Moeen Ali and MS Dhoni

அனைத்து அணிகளும் தங்களுடைய பழைய வீரர்கள் பட்டியலில் இருந்து தக்க வைக்கப் போகும் வீரர்களின் பெயரை இன்று இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்க போகின்றன. ஆனால் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப் போகும் வீரர்கள் பெயர் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் கசிந்த வண்ணம் இருக்கின்றது. அதில் சென்னை அணி தக்க வைக்கப் போகும் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, ரவிந்திர ஜடேஜா, ருத்துராஜ் மற்றும் மொயின் அலி என்று தற்பொழுது தெரிய வந்துள்ளது.

சென்னை அணியின் ஆஸ்தான நம்பிக்கை நட்சத்திரமான ஃபேப் டு பிளேசிஸ் இருக்கையில் மொயின் அலியை சென்னை அணி நிர்வாகம் தக்க வைக்க என்ன காரணம் என்று அனைத்து ரசிகர்களும் யோசித்து வந்த வண்ணம் இருக்கின்றனர். அதற்கான பதில் சென்னை அணி சிஇஓ உரையாடலின் மூலம் தற்பொழுது கிடைத்துள்ளது.

மொயின் அலியை வாங்க முக்கிய காரணமாக மகேந்திர சிங் தோனி விளங்கினார்

ஏலத்தில் மொயின் அலியை நாங்கள் நம்பி வாங்கிய இதற்கு மிக முக்கியகாரணமாக மகேந்திர சிங் தோனி எங்களுக்கு பின்னால் இருந்தார். அவர் மீது நிறைய நம்பிக்கை மகேந்திரசிங் டோனி வைத்திருந்தார். நாங்கள் மகேந்திர சிங் தோனியை நம்பி மொயின் அலியை ஏலத்தில் வாங்கினோம். அவரும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மிக அற்புதமாக விளையாடினார் என்று சென்னை அணியின் சிஇஓ கூறியுள்ளார்.

சென்னை அணி நிர்வாகம் என் மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தது

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சென்னை அணி நிர்வாகம் என் மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தது என்று மொயின் அலி சமீபத்தில் கூறியுள்ளார். அதன் காரணமாகவே அனைத்துப் போட்டிகளிலும் குறிப்பாக இறுதி போட்டியில் என்னால் அற்புதமாக விளையாட முடிந்தது என்றும் மொயின் அலி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடிய அனுபவம் தனக்கு உலக கோப்பை டி20 போட்டிகளில் நன்றாக விளையாடுவதற்கு பயணமாக அமைந்தது என்றும் மொயின் அலி குறிப்பிட்டு கூறியுள்ளார்.

சென்னை அணிக்காக இந்த ஆண்டு மொயின் அலி 15 போட்டிகளில் 137.31 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் 351 ரன்கள் குவித்தார். அதேபோல பந்துவீச்சிலும் 15 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருடைய எக்கானமி 6.36 ஆக மட்டுமே இருந்தது.