பாகிஸ்தான் வீரருக்கு தன் ஆட்டோகிராப்புடன் சி.எஸ்.கே ஜெர்சியை பரிசளித்த தோனி – அவ்வீரர் நெகிகழ்ச்சி பொங்க கூறிய வார்த்தைகள்

0
372
MS Dhoni gifts his CSK Jersey to Haris Rauf

இந்திய அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஒரு வீரராக அதே சமயம் ஒரு கேப்டனாக இரண்டிலும் மிக சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டால், அனைவரும் மத்தியில் இருந்து வரும் பொதுவான பதில் மகேந்திர சிங் தோனியாகத் தான் இருக்கும். சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக அவரது தலைமையில் இந்திய அணி 2-வது உலக கோப்பை தொடரை 2011ஆம் ஆண்டு கைப்பற்றி அசத்தியது. அதேபோல அவரது தலைமையில் முதல் முறையாக நடந்த உலக கோப்பை டி20 தொடரையும் 2007ஆம் ஆண்டு கைப்பற்றியது. அவரது தலைமையில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஒரு கேப்டனாக 3 ஐசிசி கோப்பைகளை இந்திய அணிக்காக பெற்றுக்கொடுத்த கேப்டனாக இன்றும் எம் எஸ் தோனி வலம் வந்து கொண்டிருக்கிறார். கேப்டனாக மட்டுமின்றி ஒரு வீரராக அனைத்து கிரிக்கெட் பார்மெட்களிலும் கை தேர்ந்தவராகவே எம்எஸ் தோனி கடைசிவரை விளையாடினார். அவருக்கு ரசிகர் பட்டாளம் எவ்வளவு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

ரசிகர்களை கடந்து இன்று கிரிக்கெட் விளையாடி வரும் பல்வேறு இளம் வீரர்களுக்கு அவர் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். ஐபிஎல் தொடர் நடைபெறும் பொழுது பல்வேறு இளம் வீரர்கள் அவரிடம் சென்று பல ஆலோசனைகளை பெற்று சொல்லும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நாம் நிறைய பார்த்திருப்போம்.

இந்திய வீரர்களைக் கடந்து பல்வேறு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் அவரிடம் சென்று ஆலோசனைகளை பெற தயங்கியது கிடையாது. பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு ரசிகராகவே தற்போதும் இருந்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரஊஃப்’ம் இணைந்துள்ளார்.

தனது பெயர் பொறித்த சி.எஸ்.கே ஜெர்சியை பரிசளித்த எம்எஸ் தோனி

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரஊஃப்’ க்கு எம் எஸ் தோனி தனது பெயர் பொறித்த சிஎஸ்கே அணி ஜெர்சியை பரிசளித்திருக்கிறார். அந்த ஜெர்சியை பெற்றுக்கொண்ட அவர் சமூகவலைதளத்தில் எம்எஸ் தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ட்விட்டர் வலைத்தளத்தில் தனக்கு கிடைக்கப் பெற்ற தோனி பெயர் பொறித்த சிஎஸ்கே ஜெர்சியின் படத்தை பதிவேற்றி, “இந்த அழகான ஜெர்சியை லெஜன்ட் வீரரும், கேப்டன் கூலுமான மகேந்திர சிங் தோனி எனக்கு பரிசு வைத்திருக்கிறார். நம்பர் 7 என பொறிக்கப்பட்ட இந்த ஜெர்சி இன்னும் பல இதயங்களை, அவரது நல்ல செயல் மற்றும் நல்ல உள்ளம் காரணமாக கொள்ளை கொண்டு வருகிறது. இந்த ஜெர்சி எனக்கு கிடைக்கப் பெற மிகப்பெரிய அளவில் உதவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டீம் மேனேஜர் ரஸ்ஸலுக்கு எனது நன்றி என்று ஹாரிஸ் ரஊப் குறிப்பிட்டு கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.