சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பை இந்த வீரரிடம் ஒப்படைக்க எம்.எஸ்.தோனி முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
25725
MS Dhoni CSK Captaincy

இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை தென் ஆப்ரிக்காவில் டெஸ்ட் தொடரில் இந்தியா வென்றது கிடையாது என்ற மோசமான வரலாற்றை தற்போது மாற்ற இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது தற்போது. இப்போது தொடர் சமநிலையில் உள்ளது. இன்று இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தென் ஆப்ரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை கோலி படைக்கலாம். சிறப்பாக விளையாடி இந்திய அணி மிச்சம் இருக்கும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். என்ன தான் தென் ஆப்ரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வந்தாலும் இப்போதே ரசிகர்களின் கவனம் ஐபிஎல் தொடர் மீது வந்து விட்டது.

இதுவரை 8 அணிகள் பங்கேற்று வந்த ஐபிஎல் தொடரில் இனிமேல் 10 அணிகள் பங்கேற்கும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து விட்டது. மேலும் இந்த தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே இந்த வீரர்கள் எல்லாம் தக்க வைக்கப் போகிறோம் என்ற பட்டியலை 8 அணிகளும் வெளியிட்டுவிட்டனர். புதிதாக வந்த இரண்டு அணிகளும் 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பே ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் சிறந்த அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். நான்கு முறை இதுவரை கோப்பையை கைப்பற்றி இந்த அணி அசத்தியுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை இந்த அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி உள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டதால் எந்த நேரமும் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஒரு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை மறைமுகமாக சென்ற ஆண்டே தோனி கூறினார். ஆனால் ஒரு அணியை அப்படியே விட்டு விட்டு செல்வது கேப்டனுக்கு அழகு அல்ல என்பதால் இந்த ஆண்டே ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சாதாரண வீரராக தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு செய்வதால் கேப்டன்சி குறித்த ஆலோசனைகளை ஜடேஜாவுக்கு காலத்திலிருந்தே தோனியால் கொடுக்க முடியும். தோனியின் ஆலோசனையில் ஜடேஜா கேப்டனாக விளையாடுவதைக் காண சென்னை அணியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.