மீண்டும் தோனி – யுவராஜ் இணைவதற்கான காரணம் என்ன ? ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
224
Yuvraj Singh and MS Dhoni Meetup

இந்திய அணியில் நீண்ட காலமாக தீர்க்கமுடியாத பிரச்சினையாக இருப்பது நான்காம் நிலை வீரருக்கான இடம்தான். பல வருடங்களாக பல வீரர்களை முயற்சி செய்து செய்து எந்த பலனும் கிடைக்காமல் இந்திய அணி தவித்து வந்துள்ளது. ஆனால் இந்தச் சிக்கல் இந்திய அணியில் யுவராஜ் சிங் ஆடிய வரை இருந்தது கிடையாது. அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தாலும் யுவராஜ் சிங் தனியாளாக நின்று எத்தனையோ ஆட்டங்களில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். அதிரடியாக ஆட வேண்டும் என்றாலும் சரி அல்லது அன்றைய ஆட்டத்திற்கு ஏற்ப பொறுமையாக ஆட வேண்டும் என்றாலும் சரி என இரண்டிலும் சிறப்பாக விளையாடுபவர் யுவராஜ் சிங். பேட்டிங் மட்டுமல்லாது பந்துவீச்சிலும் தேவையான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து கொடுத்து மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்தவர் யுவராஜ்.

அதேபோல அந்தக்கால அணியில் யுவராஜ் சிங்குடன் இணைந்து விளையாடிய மற்றொரு முக்கிய வீரர் தோனி. தோனியும் இருவரும் இணைந்து அமைத்த பல பார்ட்னர்ஷிப்புகள் எதிர் அணியின் வெற்றி கனவை கலைத்து உள்ளன. தோனியின் அதிரடி ஆட்டம் முன்பு ஈடுகட்ட முடியாமல் பல பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி கொடுத்துள்ளனர். வெறும் பேட்டிங் ரோடு நிற்காமல் தோனி கீப்பிங் மற்றும் கேப்டன்சி என அனைத்திலும் சிறப்பாக இந்திய அணிக்கு பங்காற்றியுள்ளார். அதுவும் அல்லாமல் இந்திய அணிக்கு மூன்று முக்கிய ஐசிசி தொடர்களை கேப்டனாக விட்டுக் கொடுத்துள்ளார் தோனி.

- Advertisement -

இருவரும் இணைந்து விளம்பரப்படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த இருவருமே இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் மீண்டும் இந்த இருவரும் தற்போது சந்தித்துள்ளனர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு மீண்டும் களத்திற்கு திரும்புவதாக யுவராஜ் சிங் அறிவித்திருந்தார். அப்போது சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடருக்காக இருக்கும் என்று பலரும் நினைத்தனர். தற்போது தோனியின் ஓய்வு பெற்று விட்டதால் அவரும் ரோட் சேஃப்டி தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அப்படி நடந்தால் தோனி மற்றும் யுவராஜ் இணைந்து விளையாடுவதை மீண்டும் ஒருமுறை ரசிகர்கள் காண வாய்ப்பு உள்ளது