நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த தோனி – ரெய்னா ! மகிழ்ச்சியின் உச்சியில் ரசிகர்கள் – சமூக வலைதளங்களில் வைரல்

0
42
MS Dhoni and Suresh Raina

இந்திய அணி தற்போது இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இளம் வீரர்கள் சிலருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது!

இந்தச் சுற்றுப்பயணத்தில் முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி அதில் தோற்றது. ஆனாலும் அந்த டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆகியது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி அதை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.

இதற்கடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. பும்ரா 6/19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரோகித் சர்மா 58 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடந்து வருகிறது. முதல் போட்டியில் இடுப்பு பகுதியில் வலி இருந்ததால் விளையாடாத விராட் கோலி இன்றைய போட்டிக்குத் திரும்பினார். டாஸில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய பந்து வீச்சாளர்கள் இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் கிரான்ட்ஸ்லாம் விம்பிள்டன் போட்டிகளைக் காண இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. மேலும் அவர் டி20 தொடரின் போது இந்திய வீரர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். மேலும் மைதானத்திற்கும் சென்று போட்டியைக் கண்டுகளித்தார்.

இந்த நிலையில் இன்று இலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியைக்காண தல மகேந்திர சிங் தோனி சென்றிருக்கிறார். இதில் சுவராசியம் என்னவென்றால் சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் சென்றிருக்கிறார். தாங்கள் இருவரும் லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் புகைப்படத்தை சுரேஷ் ரெய்னா தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிந்திருக்கிறார்!