நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த தோனி & சாஸ்திரி !

0
73
Ravi Shastri and MS Dhoni

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து, முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி தோற்றது. இதற்கடுத்து மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வென்று தொடரை கைப்பற்றி, இன்று மூன்றாவது டி20 போட்டியில் விளையாடி வருகிறது.

இந்திய அணியைப் போலவே இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார் மகேந்திர சிங் தோனி. உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் கிரான்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகளை மகேந்திர சிங் தோனி பார்த்தது இணையத்தில் காணக் கிடைத்தது. நேற்று பர்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின் முடிவிற்குப் பிறகு, இந்திய அணி வீரர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன் புகைப்படங்களை பி.சி.சி.ஐ-யும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றின.

- Advertisement -

இன்று இந்தியா இங்கிலாந்து மோதும் தொடரின் இறுதி டி20 போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சிப்லி, சால்ட் ஆகியோர் இடம் பெற்றனர். சாம் கரன், மற்றும் ஒரு ஸ்பின்னர் நீக்கப்பட்டனர். இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஸ்ரேயாஷ், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்தப் போட்டியைக் காண மகேந்திர சிங் தோனி மைதானத்திற்கு நேரில் வருகை தந்திருந்தார். மேலும் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியோடு தீவிரமாக ஏதோ ஒரு விசயத்தைப் பேசியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இருவருமே ஆடும் காலங்களில் புத்திசாலித்தனமாகச் செயல்படுவதில் வல்லவர்கள்.

இதில்லாமல் ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் தோனி விளையாடிய கடைசிப்போட்டி, இதே ஜூலை 10ஆம் தேதிதான், 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அமைந்தது. அந்த ஆட்டத்தில் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் ரன்-அவுட்டாகி வெளியேறினார். இன்று ரவி சாஸ்திரியோடு தோனியைக் கண்ட இரசிகர்கள் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்!

- Advertisement -