இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆடிய வீரர்களிலயே அதிகம் படித்த வீரர் யார் தெரியுமா?

0
226
Aavishkar Salvi

பொதுவாக இந்திய அணிக்கு கிரிக்கெட் விளையாட வரும் வீரர்கள் அனைவரும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தான் வருவர். காரணம் இந்திய தேசத்தில் அனைவருக்கும் ஒரு கட்டத்தில் படிப்பா அல்லது விளையாட்டா என்று ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் நிச்சயமாக வரும். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டாலும் வெகுசிலரே இந்திய அணிக்கு தேர்வு ஆகிறார்கள். அணிக்கு தேர்வு ஆனாலும் அதிக காலம் இந்திய அணியில் நீடிப்பது இன்னமும் வெகு சிலர் தான்.

நிலைமை இப்படி இருப்பதால் வெகுசிலரே தாங்கள் எடுத்துக்கொண்ட படிப்பை கிரிக்கெட்டிற்கு வந்தாலும் முடித்துவிட்டு வருகின்றனர். ராகுல் டிராவிட், ஜவகல் ஸ்ரீநாத் போன்றோர் தங்கள் படிப்பை முடித்துவிட்டு தான் கிரிக்கெட்டுக்குள் வந்தனர். தற்போது இந்திய அணியின் ஸ்பின் ஜாம்பவானாக விளங்கி கொண்டிருக்கும் அஷ்வினும் படிப்பை முடித்து விட்டுத்தான் வந்தார். ஏதோ ஒரு டிகிரி முடித்தோம் என்று இல்லாமல் ஒரு சிலர் எல்லாம் பொறியியல் போன்ற மிகக் கடினமான படிப்பெல்லாம் படித்து முடித்து விட்டுத்தான் வந்துள்ளனர்.

ஆனால் இந்திய அணியில் அதிகம் படித்துள்ள கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டால் அதற்கு டிராவிட், கும்ளே, ஸ்ரீநாத் என்று யாரும் பதில் கிடையாது. அது யார் என்றால் இந்திய அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற ஆவீஷ்கர் சல்வி என்னும் வீரர் தான். கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 4 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இவர். மேலும் மும்பை ரஞ்சி அணிக்கு பிரதான பந்துவீச்சாளராக செயல்பட்டு 169 முதல்தர விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்.

Aavishkar Salvi India

மிகப்பெரிய காயத்தின் காரணமாக இவரது கிரிக்கெட் வாழ்க்கை மிக சிறிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத் போன்று பந்து வீசும் திறமை படைத்தவர் இவர். கிரிக்கெட்டோடு இல்லாமல் படிப்பிலும் மிகப் பெரிய ஜாம்பவான். Astrophysics என்று சொல்லப்படும் வான் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் (PhD) பெற்றுள்ளார் சல்வி.

கிரிக்கெட் விளையாட்டு என இரண்டையும் எப்படி இவர் ஒரே நேரத்தில் சமாளித்தார் என்பதை தற்போது ரசிகர்கள் வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.