ஐபிஎல் தொடர் காரணமாக மைக்கல் கிளார்க் என்னுடன் உடனான நட்பை உடைத்துக் கொண்டார் – உண்மையை போட்டு உடைத்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

0
677
Michael Clarke and Andrew Symonds

ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் மைக்கேல் கிளார்க் இருவரும் பெயர் போனவர்கள். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடிய திறமைசாலிகள்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ உடன் உரையாடலில் கலந்து கொண்ட ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனக்கும் மைக்கேல் கிளார்க்கும் இருந்த நட்பில் விரிசல் ஏற்பட ஐபிஎல் தொடர் ஒரு காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

- Advertisement -
ஐபிஎல் தொடரில் விளையாடிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் மைக்கேல் கிளார்க்

2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் டெக்கான் சார்ஜஸ் அணியில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விளையாடினார் அதன் பின்னர் 2011ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். மறுபக்கம் மைக்கேல் கிளார்க் 2012 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் இந்தியா அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஆண்ட்ரூ சைமண்ட்ஸை 1.35 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரை ஒப்பிட்டு பார்க்கையில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்சுக்கு ஐபிஎல் தொடரில் கூடுதலாக வருவாய் கிடைத்தது.

அவருக்கு பொறாமை வந்தது

ஐபிஎல் தொடரில் தனக்கு கூடுதலாக அதிக வருவாய் கிடைத்தை சுட்டிக்காட்டி கூறியுள்ள ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், “ஐபிஎல் தொடரில் எனக்கு அப்போது நிறைய வருவாய் கிடைத்தது. ஐபிஎல் தொடரில் எனக்கு அதிக வருவாய் கிடைத்த பொழுது மைக்கேல் கிளார்குக்கு சற்று பொறாமை ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் நாங்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணியில் ஒன்றாக இணைந்து விளையாடுகிறது வேளையில் நிறைய பேசுவோம். நாங்கள் இருவரும் நட்பு பாராட்டிக் கொள்வோம். ஆனால் ஐபிஎல் தொடரில் எப்பொழுது எனக்கு நிறைய வருவாய் கிடைக்க ஆரம்பித்ததோ அப்போது எங்கள் நட்பில் சிறிய விரிசல் ஏற்பட்டது, என்று கூறியுள்ளார்.”

மேலும் பேசிய அவர் பணம் நிறைய வேடிக்கையான விஷயங்களை செய்யும். அது நல்ல விஷயம் தான் ஆனால் அதுவே காலப்போக்கில் ஒரு நாள் விஷமாக மாறிவிடும். அப்படித்தான் அது எங்களுடைய நட்பில் ஆரம்ப காலகட்டத்தில் சிறு பிரிவினையை ஏற்படுத்தியது என்று ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் கூறியுள்ளார்.