என்னைவிட சூரியாவுக்கு இது போய் சேரனும் – ஆட்டநாயகன் விருது பெற்ற கேஎல் ராகுல் பேட்டி!

0
536

இந்த ஆட்டநாயகன் விருது சூரியகுமார் யாதவிற்க்கு சென்றிருக்க வேண்டும் என போட்டி முடிந்த பிறகு மனம் திறந்து பேசி உள்ளார் கே எல் ராகுல்.

இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுடனான 2வது டி20 போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணிக்கு ஓபனிங் செய்ய கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கி, முதல் ஓவரில் இருந்தே வெளுத்து வாங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 37(43) ரன்கள் எடுத்து அவுட்டானார். மிக அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 55(28) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்..

பின்னர் விராட் கோலி – சூரியகுமார் ஜோடி சேர்ந்தனர். முதல் பந்தில் பவுண்டரி அடித்து அதிரடியை துவங்கினார். 18 பந்துகளில் அரைசதம் அடித்து அணியின் ஸ்கொரை 200 மேலே விரைவாக எடுத்து சென்றார். சூரியகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 61(22) ரன்களை குவித்தார்.

விராட்கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49(28) ரன்கள் எடுத்திருந்தார். கடைசியில் வந்த தினேஷ் கார்த்திக் 17(7) ரன்கள் அடிக்க, 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. டெம்பா பவுமா, ரூசோ ரன் அடிக்காமல் வெளியேறினார்கள். மார்க்ரம் 33 ரன்களில் அவுட் ஆனார்.

4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக், டேவிட் மில்லர் ஜோடி முதலில் விக்கெட் விடாமல் நிதானம் காட்டினர். பிறகு பயங்கரமான அதிரடியில் ஈடுபட்டார்கள். அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தார்கள். இதற்குப் பிறகு டேவிட் மில்லரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 46 பந்துகளில் 2வது டி20 சதத்தை அடித்தார். இன்னொரு முனையில் விளையாடிய குயின்டன் டி காக் 69(48) ரன்களை அடித்தார். இந்த ஜோடி மொத்தம் 174 ரன்கள் குவித்தது. இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோர் எட்டுவதற்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்த கே எல் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேட்டியளித்த அவர் கூறுகையில்,

“இரண்டு போட்டிகளிலும் இரு வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டிலும் இந்திய அணியின் வெற்றிக்காக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தேன். விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ரோகித் சர்மா உடன் பேசுகையில் 180 முதல் 185 ரன்கள் வரை டார்கெட் வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். இறுதியில் இந்திய அணி ஸ்கோர் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் மேன் ஆப் தி மேட்ச் விருது எனக்கு கிடைத்தது ஆச்சரியத்தை கொடுக்கிறது. சூர்யகுமார் யாதவ் இதை பெற்றிருக்க வேண்டும். அவர்தான் ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றினார். மிடில் ஆர்டரில் இப்படி அதிரடியாக விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. ஆகையால் இதற்கு அவர் தான் சரியாக இருப்பார். தினேஷ் கார்த்திக் போதிய பந்துகள் விளையாடுவதில்லை, ஆனாலும் அவர் தனது இடத்தை நிரூபித்து அதிரடியில் அசத்துகிறார். ஒட்டுமொத்தமாக இந்திய அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.” என்றார்.