சேர்ந்து பயிற்சி செய்த முகமது ஷமி – ஷாகின் அப்ரிடி – வீடியோ இணைப்பு!

0
898
Sami

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே அந்தப் போட்டி உலகில் எந்த மூலையில் நடந்தாலும் அந்த மைதானம் ரசிகர்களால் நிரம்பும். அந்தப் போட்டி குறித்த எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் உலகத்தில் நிலவும். அந்த அளவிற்கு இரு நாடுகள் போதும் போட்டிக்கு முக்கியத்துவம் இருக்கிறது!

தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுப்பகுதி காயத்தால் வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்து குணமாகி இந்த டி20 உலகக் கோப்பைக்கு திரும்பி வந்திருக்கிறார்.

இன்னொரு புறத்தில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வேகப்பந்து வீச்சாளராக அறிவிக்கப்பட்ட முகமது ஷமி கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து இந்திய அணிக்குள் வந்திருக்கிறார்.

இன்று முதலில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த பயிற்சி போட்டியில் முகமது ஷமி கடைசி ஓவரில் வந்து பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை அதிரடியாக வெற்றி பெற செய்தார். இதே மைதானத்தில் இந்தப் போட்டி முடிந்து பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த பயிற்சி போட்டியில் காயத்தில் இருந்து திரும்பி வந்த ஷாகின் அப்ரிடி 2 ஓவர்கள் பந்து வீசினார்.

- Advertisement -

இதற்கு முன்பு போட்டி நடைபெற்ற பிரிஸ்பேன் மைதானத்தில் பயிற்சி செய்ய ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ஷாகின் அப்ரிடியை பயிற்சி செய்ய வந்த முகமது ஷமி சந்தித்துப் பேசினார். பின்பு இருவரும் சேர்ந்து பந்து வீசினார்கள். அதற்குப் பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். மேலும் இவர்கள் இல்லாது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா, மற்றும் நியூசிலாந்து வீரர் ஒருவர் அங்கு பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.